இங்கிலாந்தை வீழ்த்தி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா மாஸ் கம்பேக்

0
711
Rohit

தற்போது 2023-25 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையே பெரிய அளவில் போட்டி நிலவி வருகிறது.

- Advertisement -

சவுத் ஆப்பிரிக்காவில் டி20 லீக் நடைபெற்ற காரணத்தினால் அவர்கள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சிறிதும் அனுபவமே இல்லாத இளம் அணியை நியூசிலாந்து அணிக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணியிடம் மோசமாக தோற்று திரும்பியது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் மேலே சென்றது. தென் ஆப்பிரிக்கா அணி தனது வாய்ப்புகளை கெடுத்துக் கொண்டது.

இந்த நிலையில் இந்திய அணி உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்து, தற்பொழுது நியூசிலாந்துக்கு சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, தரம்சாலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியை இன்று வென்று, அசத்தலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் விட அதிகம்.. இந்திய டெஸ்ட் வீரர்களுக்கு 3 மடங்கு போனஸ்.. பிசிசிஐ அறிவிப்பு

மேலும் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. மூன்றாவது இடத்தில் தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவுகள், இந்திய அணியின் முதல் இடத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :

இந்தியா – 68.51
நியூசிலாந்து – 60.0
ஆஸ்திரேலியா – 59.09
பங்களாதேஷ் – 50.0
பாகிஸ்தான் – 36.66
மேற்கிந்திய தீவுகள் – 33.33
தென்னாப்பிரிக்கா – 25.0
இங்கிலாந்து – 17.5
இலங்கை – 0.0

- Advertisement -