“இந்தியா எடுத்தது புத்தி இல்லாத முடிவு.. பாகிஸ்தானுக்கு ரொம்ப நல்லது!” – சோயப் அக்தர் பரபரப்பான கருத்து!

0
3309
Rohit

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது!

இந்தப் போட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளமாக இருக்கிறது. மேலும் பவுன்ஸ் ஸ்பின் என்று எதுவும் பெரிதாக இல்லை. ஓரளவுக்கு தைரியமாக விளையாடும் பொழுது ரன்கள் தாராளமாக கிடைக்கின்ற நிலைதான் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்யவில்லை. மாறாக அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் அவர் சர்துல் தாக்கூர் இடத்தில் சுழற் பந்து வீச்சு ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டு வர விரும்பவில்லை. மேலும் முகமது சமிக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

ரோகித் சர்மா டாஸ் வெற்றி பெற்ற நிகழ்வில் பேசும்பொழுது, இந்த மைதானத்தில் பனிப்பொழிவு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார். எனவே இந்தக் காரணத்தினால் அவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்திருந்ததாக தெளிவுப் படுத்தினார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை ஏழு முறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதி ஏழு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் ஆறு முறை இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. 2003 ஆம் ஆண்டு மட்டும் முதலில் பந்துவீசி வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வெற்றி பெற்ற பிறகு ரோகித் சர்மா எடுத்த முடிவு குறித்தும், இந்தப் போட்டிக்கு ரோகித் சர்மா தேர்ந்தெடுத்த அணி குறித்தும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் லெஜெண்ட் வீரர் சோயா அக்பர் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இது ஒரு நல்ல விக்கெட். ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக கூறியது எனக்கு சரியாகப்படவில்லை. மேலும் அவர்கள் ஏன் கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை விளையாடவில்லை என்றும் தெரியவில்லை.

பாகிஸ்தானுக்கு இங்கு முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவால் எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான முடிவு கிடையாது. அவர்கள் பாகிஸ்தானுக்கு பெரிய ரன்கள் எடுக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர்!” என்று கூறியுள்ளார்!