ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

0
6017
ICT

ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து தற்பொழுது நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவி இருக்கிறது!

இந்த நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்ட அதே இந்திய அணியே அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிந்த பின்பு அடுத்து நடக்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கும் இந்திய அணி சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆகவும் இருக்கிறார்.

மார்ச் 17ஆம் தேதி மும்பை வான்கடவில் துவங்கும் முதல் ஒருநாள் போட்டியில் குடும்ப விஷயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19ஆம் தேதி இரண்டாவது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடக்கிறது. மார்ச் 22ஆம் தேதி சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் மூன்றாவது போட்டி நடக்கிறது. இதற்கு அடுத்து மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி!

ரோஹித் சர்மா கேப்டன்
ஹர்திக் பாண்டியா துணை கேப்டன்
கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர்
இஷான் கிஷான் விக்கெட் கீப்பர்
சுப்மன் கில்
விராட் கோலி
ஸ்ரேயாஷ் ஐயர்
சூரியகுமார் யாதவ்
ரவீந்திர ஜடேஜா
அக்சர் படேல்
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
யுஸ்வேந்திர சகல்
முகமது சிராஜ்
முகமது சமி
உம்ரான் மாலிக்
சர்துல் தாகூர்
ஜெயதேவ் உனட்கட்

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 18 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணியில் இருந்துதான் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணிக்குள் புதியதாக ஒருவர் வருவார் என்றால் அது பும்ராவாக மட்டுமே இருக்கும்!

- Advertisement -