பங்களாதேஷ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; இளம் வீரருக்கு மீண்டும் ஏமாற்றம்!

0
7320
ICT

இந்திய அணி தற்போது நடந்து வரும் டி20 உலக கோப்பையை முடித்துக் கொண்டு, நியூசிலாந்து சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில், ஹர்திக் பாண்டியா மற்றும் சிகர் தவன் தலைமையில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கும் விராட் கோலி கே.எல். ராகுல் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான அட்டவணை நமது பக்கத்தில் முன்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி பங்களாதேஷ் என்று மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரிலும் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களுக்கும் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக கேஎல் ராகுலும் தொடர்கிறார்கள். விராட் கோலி இரண்டு தொடர்களுக்கும் வருகிறார்!

- Advertisement -

இதில் முதல் தொடராக ஒரு நாள் போட்டி தொடர் டிசம்பர் 4, 7, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது. அடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 14, 22 ஆகிய தேதிகளில் நடக்கிறது!

ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணி ;

ரோகித் சர்மா கேப்டன், கே.எல்.ராகுல் துணை கேப்டன், விராட் கோலி, சிகர் தவான், ரஜத் பட்டிதார், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் மற்றும் இசான் கிசான் விக்கெட் கீப்பர்கள், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாக்கூர், முகமது சமி, முகமது சிராஜ், தீபக் சாகர், யாஷ் தயால்.

- Advertisement -

டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி;

ரோகித் சர்மா கேப்டன், கே எல் ராகுல் துணை கேப்டன், விராட் கோலி, சதேஷ்வர் புஜாரா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே எஸ் பரத், ரவிச்சந்திரன், அஸ்வின் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சர்துல் தாக்கூர், முகமது சமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் தொடர்களுக்கு இந்திய அணியில் ஜஸ்ட்பிரித் பும்ரா திரும்பவில்லை. அவர் காயத்தின் தன்மை குறித்து எதுவும் தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு சுற்றுப் பயணங்களிலும் உள்நாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரித்வி ஷா மற்றும் சர்பராஸ் கான் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை!