பாகிஸ்தான் கிரிக்கெட் மெல்ல மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கிறது. ஆஸ்திரேலியா போன்ற பெரிய நாடுகள் பாகிஸ்தானிற்குச் சென்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து உள்ளன. பாபர் ஆசமின் தலைமையில் தற்போது பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் சிறப்பாக மாறியுள்ளது!
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அணியோடு ஒருநாள் தொடரை உள்நாட்டில் வைத்து வென்றிருந்தது பாகிஸ்தான் அணி. இதற்கடுத்து சமீபத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மீண்டும் உள்நாட்டில் வைத்து வென்றது. இதனால் இந்திய அணியை நான்காவது இடத்திற்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்குத் தரவரிசை பட்டியலில் முன்னேறி இருந்தது.
தற்போது இங்கிலாந்து சென்றுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நேற்று இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 25.2 ஓவரில் 110 ரன்களுக்கு சுருட்டி, இலக்கை 18.4 ஓவரில் எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. ஜஸ்ப்ரீட் பும்ரா 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரோகித் சர்மா 58 பந்துகளில் 76 ரன்களை குவித்தார்.
இந்த வெற்றியின் மூலமாக ஒருநாள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால் இங்கிலாந்த அணியுடனான அடுத்த இரண்டு போட்டிகளிலும், வெஸ்ட் இன்டீஸ் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் தோற்றாலோ இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணிக்குக் கீழே செல்லும்.
ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல்
- நியூசிலாந்து – 126 புள்ளிகள்
- இங்கிலாந்து – 122 புள்ளிகள்
- இந்தியா – 108 புள்ளிகள்
- பாகிஸ்தான் – 106 புள்ளிகள்
- ஆஸ்திரேலியா – 101 புள்ளிகள்
- தென் ஆப்பிரிக்கா – 99 புள்ளிகள்
- பங்களாதேஷ் – 96 புள்ளிகள்
- இலங்கை – 92 புள்ளிகள்
- வெஸ்ட் இன்டீஸ் – 71 புள்ளிகள்
- ஆப்கானிஸ்தான் 69 புள்ளிகள்