செமி-பைனலில் இந்தியா பண்ண பெரிய மிஸ்டேக் இதுதான் – ஷேன் வாட்சன் கருத்து!

0
44465

செமி-பைனலில் இந்திய செய்த மிகப்பெரிய தவறு இதுதான் என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஷேன் வாட்சன்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை டி20 தொடரின் அரை இறுதிச் சுற்றோடு இந்திய அணி பரிதாபமாக இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வெளியேறி இருக்கிறது. இதனால் இதுவரை கண்டிராத அளவிற்கு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

- Advertisement -

பலம் பொருந்திய இந்திய அணி எளிதாக இங்கிலாந்தை வீழ்த்திவிட்டு அரை இறுதி சுற்றில் இருந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கலாம். ஆனால் ஆங்காங்கே செய்த தவறுகளால் தற்போது உலக கோப்பையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இத்துடன் தொடர்ந்து 9 ஆண்டுகள் எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்ற நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் இந்த தோல்விக்கு ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரின் பேட்டிங், புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது சமி போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் சோபிக்காதது என பல்வேறு காரணங்களை கூறி வந்தாலும், இதுதான் உண்மையான காரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வாட்சன்.

- Advertisement -

“உலக கோப்பை டி20 தொடரில் யுசுவேந்திர சகலை அழைத்து வந்து, ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கவில்லை என்பது இந்தியா செய்த மிகப்பெரிய தவறு. குறிப்பாக அரை இறுதி போட்டியில் எதிரணி லிவிங்ஸ்டன் போன்ற வீரரை பந்துவீச்சை பயன்படுத்தி எளிதாக ரன்களை கட்டுப்படுத்தியது.

அதை சகல் இந்தியாவிற்கு சிறப்பாக செய்திருப்பார். ஏன் இந்தியா சகலை விளையாட வைக்கவில்லை? என்பது தற்போது வரை எனக்கு புரியவில்லை. இதுதான் ரோகித் சர்மா தலைமையிலான அணி செய்த தவறு என்று நினைக்கிறேன்.

- Advertisement -

மேலும் துவக்க வீரர்கள் தவறு செய்யவில்லை. விக்கெட் இழக்கக்கூடாது என்ற பயத்தில் விளையாடியதால் தான் எளிதாக விக்கெட்டை இழந்து சென்றார்கள். மிகப்பெரிய தொடரில், குறிப்பாக திறமையான எதிரணிகளின் பந்துவீச்சை கொள்ளும் பொழுது இத்தகைய பயம் இல்லாமல் துணிந்து விளையாடி இருந்தால் சிறப்பான துவக்கம் கிடைத்திருக்கலாம். அந்த விதத்தில் தவறு நேர்ந்து விட்டது.” என்றும் குறிப்பிட்டார்.