சூப்பர் 8 சுற்றில் இந்த இரண்டு அணிகளும் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.. கூறுகிறார் பியூஸ் சாவ்லா

0
964

டி20 உலக கோப்பை கிரிக்கெட் லீக் தொடர் தற்போது சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று இருந்த இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

இந்த நிலையில் சுற்றான சூப்பர் 8 சுற்றல் இந்த இரண்டு அணிகளும் இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்கும் என்று பியூஸ் சாவ்லா கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வரிசையாக அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகளை வீழ்த்தி தற்போது வெற்றியின் உத்வேகத்தில் இருக்கிறது. நேற்று மழையின் காரணமாக கனடா அணிக்கு எதிராக நடைபெற இருந்த ஆட்டம் தடைபட்டது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற உள்ள சூப்பர் 8 போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ், அமெரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுடன் அடுத்த சுற்றில் மோத உள்ளது.

கத்துக்குட்டி அணிகளை லீக் சுற்றில் வீழ்த்திய இந்திய அணிக்கு உண்மையான ஆட்டங்களே இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்திய அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய வீரர் பியூஸ் சாவ்லா கூறியிருக்கிறார். ஏனெனில் அந்த பிரிவில் இரண்டு அணிகளுமே ஆபத்தானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சாவ்லா விரிவாக கூறும்பொழுது
“ஐசிசி நிகழ்வுகளில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி எப்போதுமே ஆபத்தான ஒன்று. அவர்களால் உலகக் கோப்பையில் எந்த அணியையும் வீழ்த்த முடியும். அவர்களால் என்ன முடியும் என்பதை நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். அதுபோலவே ஆப்கானிஸ்தான் ஒரு அருமையான அணியை கொண்டுள்ளது. அவர்களது பந்துவீச்சு வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் சிறப்பாக உள்ளது.

இதையும் படிங்க:நான் தென் ஆப்பிரிக்காதான்.. ஆனா நேபாள் ஜெயிக்கணும்னு நினைச்சேன்.. இதுதான் காரணம் – டேல் ஸ்டெய்ன் பேச்சு

அங்குள்ள மைதானங்களில் அவர்கள் ரசித்து பந்து வீசுகிறார்கள். பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும் நன்றாக விளையாடுகிறது. ஆனால் அந்த அணி போட்டித் தன்மையில் இருப்பதாக நான் உணரவில்லை. வலுவான அணியாக மாறுவதில் அவர்கள் இன்னும் பின்தங்கி உள்ளார்கள். இருப்பினும் குரூப் ஏ பிரிவில் நன்றாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளை தவிர தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் வலுவாகவே இருக்கின்றன. எனவே இனி சூப்பர் 8 சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை இந்தியாவுக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன என்று எதிர்பார்க்கலாம்.