ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி.. இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு.. பிளேயிங் லெவன்

0
536

இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி 9:30 மணிக்கு தொடங்கும். நான்கு  டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் வென்றாக வேண்டும். இரண்டு போட்டியில் டிரா பெற்று தொடரை கைப்பற்றினால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற முடியாது.

- Advertisement -

இதனால் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. நாக்பூர் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி அதிகபட்சமாக நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட கூடும். தொடக்க வீரராக கே எல் ராகுலுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.ஏனென்றால் அவர் அணியின் துணை கேப்டன் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படலாம்.

மற்றபடி ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி நடு வரிசை வீரர்களாக இருப்பார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாடுவதால் அவருக்கு பதில் ஜடேஜா அணியில் இருக்கலாம். இதேபோன்று விக்கெட் கீப்பராக கே எஸ் பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்படும். பந்துவீச்சாளர்களாக அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என மொத்தம் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெறலாம்.

இதே போன்று வேகப்பந்துவீச்சார்கள் முகமது சிராஜ் மற்றும் முகமது சமி ஆகியோர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சுழற் பந்துவீச்சாளர்கள் நான்கு பேர் தேவையில்லை என இந்திய அணி முடிவு எடுத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சுப்மன் கில்லும் ,அக்சர் பட்டேல் இடத்தில் ஜடேஜாவும் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் போராடும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

- Advertisement -