“2022 பைனலுக்கு இந்தியா வரலபா!”.. ஆசிய கோப்பை யாருக்கு?.. வாசிம் அக்ரம் கணிப்பு!

0
2880
Wasim Akram

இந்தியாவில் நடக்க இருக்கும் 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஆசிய அணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இருக்கிறது!

எனவே இந்தத் தொடருக்கு அனைத்து அணிகளும் மிக தீவிரமான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய அணி ஆலூரில் ஆறு நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருக்க, பாகிஸ்தான் அணி இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி முடித்து இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் யார் வெற்றி பெறுவார்கள்? எந்த அணிகள் அச்சுறுத்தலாக இருக்கும்? என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் தனது கணிப்புகளை முன்வைத்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” இந்தியா பாகிஸ்தான் இலங்கை எந்த அணியாக இருந்தாலும், அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் 10 ஓவர்கள் வீசுவார்களா? என்பதை இந்த தொடரில் நாம் கண்டுபிடிப்போம். இப்போதெல்லாம் இவர்கள் டி20 யில் நான்கு ஓவர்கள் பந்து வீசி பழக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஏசிசி ஆசிய கோப்பையை 50 ஓவர் வடிவத்தில் நடத்துவது நல்லது. ஏனென்றால் அடுத்து 50 ஓவர் உலகக் கோப்பை இருக்கிறது.

இது நீண்ட போட்டி. ஒரு அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியாது. நீங்கள் முதலிடத்தில் இருக்க கேம்களை வென்றாக வேண்டும். மேலும் இது டி20 போட்டி கிடையாது. இதற்கு வித்தியாசமான மனநிலை மற்றும் உடற்தகுதி தேவை.

- Advertisement -

கடந்த முறை இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று நாம் கணித்திருந்தோம். ஆனால் தொடரை இலங்கை வென்று கைப்பற்றியது. மூன்று அணிகளும் ஆபத்தானவை. இந்த மூன்று அணிகளும் தங்கள் நாளில் யாரை வேண்டுமானாலும் வெல்லும்.

மற்ற அணிகளும் போட்டியிடும். கடந்த முறை இலங்கை சாம்பியன் பட்டம் வென்ற பொழுது, இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இது மிகவும் முக்கியமான தொடர். இருந்தாலும் மற்ற அணிகளும் இங்கு விளையாட வருகின்றன. இலங்கை அல்லது பங்களாதேஷை இங்கு குறைத்து மதிப்பிட முடியாது.

இந்தியா பாகிஸ்தான் வர மறுத்து இருக்கக் கூடாது. இந்தியா சென்று விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. அரசியலும் விளையாட்டும் எப்பொழுதும் ஒன்றுக்கொன்று விலகி இருக்க வேண்டும். மக்களுடன் தொடர்பு கொள்வது முக்கியம். சராசரி இந்தியரும் பாகிஸ்தானியரும் ஒருவரை ஒருவர் மதிக்கிறார்கள். இறுதியில் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்.

கிரிக்கெட் உலகில் இது இரண்டாவது பெரிய தொடராகும். ஆறு நாடும் தங்களது வீரர்களை காண ஆவலுடன் இருக்கிறார்கள். இது பெரிய உலகக் கோப்பைக்கு முன்பான ஒரு ஆயத்த தொடராகும்!” என்று கூறியிருக்கிறார்!