“ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரரை சீக்கிரம் ரெடி பண்ணுங்க..டைம் வந்துருச்சு” – வாய் வைத்த கௌதம் கம்பீர்!

0
4413

ஹர்திக் பண்டியாவிற்கு மாற்று வீரரை தயாராக வையுங்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்து வரும் ஹர்திக் பாண்டியா, தற்போது டி20 போட்டிகளின் கேப்டனாகவும் உயர்ந்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2020ஆம் ஆண்டு உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடும் பின்னடைவை சந்தித்து வந்த பாண்டியா, 2021 ஆம் ஆண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு மீண்டும் ஃபார்மிற்கு திரும்புவதற்கு போராடினார்.

2022 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு மும்பை அணி அவரை வெளியேற்றி கடும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனாலும் அதனால் அவர் மனம் தளரவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணி பாண்டியா மீது அதீத நம்பிக்கை வைத்து தங்களது அணிக்கு எடுத்து கேப்டனாகவும் நியமித்தது.

இந்நிலையில் இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டு அணிக்கு கோப்பையையும் பெற்று தந்தார். அதன் பிறகு இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை உச்சத்திற்கு சென்றது.

- Advertisement -

இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று இடம் பெற்று தற்போது கேப்டன் ஆகவும் உயர்ந்திருக்கிறார். பிசிசிஐ இவரது செயல்பாட்டின் மீது நம்பிக்கையை கொண்டிருப்பதால் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு கேப்டனாக நியமித்து, 2024 ஆம் ஆண்டின் டி20 உலககோப்பைக்கு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு சரியான மாற்று வீரரை தயாராக வைத்துக் கொள்வதற்கு இதுதான் நேரம் என பேட்டி அளித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் அவர் தனது பேட்டியில்,

- Advertisement -

“இந்திய அணி முழுக்க முழுக்க ஹர்திக் பாண்டியாவை நம்பி வருவது தவறு இல்லை. அதேநேரம் அவர் ஒருவரை மட்டுமே நம்பி இருந்திட முடியாது. ஆகையால் வேகப்பந்து ஆல்ரவுண்டர் மற்றொருவரை தயார் செய்ய வேண்டும். அதற்காக மாற்றுவீரரை இப்போது இருந்தே தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டால் அந்த காலகட்டத்தில் இந்த மாற்று வீரரை பயன்படுத்தி பரிசோதித்துப் பார்க்கலாம். பெஞ்ச்சில் இருக்கும் வீரர்களை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.” என்றார்.