டெஸ்ட் தொடரிலும் போச்சு.. இப்போ ஒருநாள் தொடரிலும் போச்சு; அடுத்தது நம்பர் 1 இடத்தை இழந்த இந்திய அணி – ஒருநாள் தொடரில் இப்போது என்ன ரேங்க்?

0
175

முதலில் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரிலும் நம்பர் 1 இடத்தை இழந்திருந்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்று சமனில் இருந்தது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் டிசைடர் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 269 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட் விளையும் இழந்தது. அதன் பிறகு சேஸ் செய்த இந்திய அணி 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடரையும் இழந்தது.

இந்த போட்டிக்கு முன்னர் இந்திய அணி ஒருநாள் தரவரிசை பட்டியலில், 114 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 112 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டியை இழந்ததால் இந்திய அணி தொடரையும் இழந்தது. இதன் காரணமாக தரவரிசை புள்ளிப்பட்டியலில் 112.6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அபாரமாக தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி 113.26 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

முன்னதாக, பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன், ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்திலும் இந்திய அணி இரண்டாம் இடத்திலும் இருந்தது. பின்னர் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதால் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டு முதலிடம் பிடித்தது.

அதன் பிறகு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்றுக்கொண்டு மூன்றாவது டெஸ்டில் வெற்றி மற்றும் நான்காவது டெஸ்டில் டிரா செய்ததால் ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்தது. இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி முதலில் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தையும், தற்போது ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தையும் அடுத்தடுத்து ஆஸ்திரேலியாவிடம் இழந்திருப்பது விமர்சனத்தை கொடுத்திருக்கிறது.