“இந்தியா நான் சொல்றதை கேளுங்க.. 1000 ரன் அடிக்கலாம்.. அதுக்கு..” – ஆசை காட்டும் இங்கிலாந்து வாகன்

0
1073
Vaughan

கடந்த வருடத்தில் இந்தியாவுக்கு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா வந்த பொழுது, இந்திய ஆடுகளங்கள் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்.

மேலும் முதல் இரண்டு போட்டிகள் துவங்குவதற்கு முன்னால் ஆடுகளங்களின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, மிக மோசமான குற்றச்சாட்டுகள் இந்திய அணிநிர்வாகத்தின் மேல் வைக்கப்பட்டது.

- Advertisement -

இந்த முறை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து இந்தியா வந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை விட இங்கிலாந்து கடுமையான முறையில் அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து இந்த முறை வேறுவிதத்தில் யோசிக்கிறது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் இந்தியா சுழற்சிக்கு சாதகமான ஆடுகளங்களை அமைப்பது தவறு கிடையாது என்றும், தாங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைப்பது போலத்தான் அதுவும் என்றும் பேசி இருந்தார்.

இதேபோல் இங்கிலாந்து முன்னாள் வீரர்களில் சிலர் இந்தியா தொடரை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வெளிப்படையாக கூறி வருகிறார்கள். இந்த முறை இங்கிலாந்து முகாம் வித்தியாசமான முறையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை அணுகுகிறது.

- Advertisement -

இதில் மைக்கேல் வாகன் இன்னும் சற்று வேறு விதமாக அணுகுகிறார். அவர் கூறும்பொழுது ” இந்தத் தொடரில் முதல் பந்தில் இருந்தே பந்து நிறைய திரும்ப ஆரம்பித்தால் அது நல்லதில்லை என்று நினைக்கிறேன். இங்கிலாந்து அணி ஜாக் லீச் மற்றும் இளம் சுழற் பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது.

ஜாக் லீச் ஜடேஜாவை விட சிறந்த சுழற் பந்துவீச்சாளரா? என்று கேட்டால் கிடையாது. ஆனால் சுழற்சிக்கு சாதகமான ஆடுகளங்களில் அவர் மிகச் சரியான சுழற் பந்துவீச்சாளராக இருப்பார்.

இதனால் பந்து நன்றாக சுழலும் பொழுது இந்தியாவின் பேட்டிங் பாதிக்கப்படலாம் என்று நான் நினைக்கிறேன். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு வசதியாக இருந்தால் இந்தியா ஆயிரக்கணக்கான ரன்களை அடிக்கலாம். அதே சமயத்தில் தங்கள் சிறப்பான பந்துவீச்சை வைத்து இங்கிலாந்து அணியை மடக்கலாம்” என்று கூறியுள்ளார்.