“உலக கோப்பையில் இந்தியாவ தடுக்க முடியாது.. இங்கிலாந்துக்கு அட்டவணை இப்படி கொடுத்தா என்ன பண்றது?!” – ஸ்டூவர்ட் பிராட் குற்றச்சாட்டு!

0
1807
Broad

நடந்து முடிந்த ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் இங்கிலாந்தின் லெஜன்ட் வேதப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.

தற்பொழுது இங்கிலாந்து மூன்று வடிவ கிரிக்கெட் கிரிக்கெட்டுக்கும் தனித்தனி அணிகளை கொண்டிருப்பதோடு, மூன்று வடிவத்திலும் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அதிரடியாக விளையாடுகிறது. மேலும் பலமாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

உலகக் கோப்பையை வெல்லும் மூன்று அணிகளில் ஒரு அணியாக இங்கிலாந்து பல முன்னாள் வீரர்களால் கணிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஸ்டூவர்ட் பிராட் “இங்கிலாந்து உலக கோப்பையை தக்க வைத்துக் கொள்ள முடிந்தால் அது ஒரு அற்புதமான முயற்சி ஆக இருக்கும். ஆனால் இந்தியா அவர்களுடைய பாதையில் சரியாக விளையாடினால் அவர்களை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம் என்பதே என்னுடைய உணர்வாக இருக்கிறது.

ஜோஸ் பட்லர் நிச்சயம் சவால் தரக்கூடிய அணியை வைத்திருக்கிறார். அதிக ரன்களை பதிவு செய்யும் வீரர். ஆனால் இந்தியா சொந்த நாட்டில் விளையாடுவதாலும், தற்போது அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் முதலிடத்தில் இருப்பதாலும், அவர்களை கடந்து செல்வது என்பது கடினமானது.

- Advertisement -

இங்கிலாந்துக்கு நான் சாக்குபோக்கு சொல்வது இல்லை. ஏனென்றால் அவர்கள் லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளை எட்டு மைதானங்களில் விளையாடுகிறார்கள். ஆனால் எந்த மைதானத்திலும் நின்று தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளை விளையாடவில்லை. அவர்கள் ஒன்பது போட்டிகளுக்கும் ஒன்பது முறை பறக்கிறார்கள்.

மற்றவர்கள் எங்காவது ஒரு மைதானத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை தங்கி விளையாடும் வசதியைப் பெற்றிருக்கிறார்கள். இங்கிலாந்து அணிக்கு அப்படியான வசதி கிடையாது. அவர்கள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு வர முடியாமல் போனால் அவர்களை மிகவும் கலங்கடித்து விடும்!” என்று கூறியிருக்கிறார்!

இங்கிலாந்து அணி உலக கோப்பையின் முதல் போட்டியில் அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. மீண்டும் இதே மைதானத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தமது ஏழாவது ஆட்டத்தில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!