“இந்தியா எங்க கண்ண திறந்திடுச்சு.. உலக கோப்பை பத்தி புரிஞ்சிடுச்சு!” – பேட் கம்மின்ஸ் தடுமாற்றமான பேச்சு!

0
24337
Cummins

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் காயத்தில் சிக்க, அந்த அணி தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு மூன்று என இழந்தது!

இந்த நிலையில் வீரர்களுக்கு காயம் முற்றிலுமாக சரி ஆகாத நிலையில், அவர்களையும் அணியில் சேர்த்துக் கொண்டு, உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதற்கு இந்தியா வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் காயத்தில் இருந்து திரும்பாத நிலையில், பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்மித் இருவர் மட்டுமே அணிக்குத் திரும்பி இருந்தார்கள்.

இன்று நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 276 ரன்களை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக ஆல் அவுட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் ருதுராஜ் இருவரும் அரைசதம் அடித்தார்கள். இவர்களைப் போலவே நான்காவது இடத்தில் வந்த கேஎல்.ராகுல் மற்றும் ஆறாவது இடத்தில் வந்த சூரியகுமார் இருவரும் அரைசதம் அடிக்க இந்தியாவின் வெற்றி மிக எளிதாக வந்துவிட்டது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு தாக்குதல், பேட்டிங் வரிசையை மிக நீளமாக அமைத்த காரணத்தினால், மிகவும் பலவீனமாக இருந்தது வெளிப்பட்டு விட்டது. இந்த வகையில் உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியா அணியால் செல்ல முடியாது என்பதை ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் உணர்ந்து இருக்கும்.

தோல்விக்கு பின் பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்
“தனிப்பட்ட முறையில் திரும்பி வந்ததிலும், இந்தியாவில் எனக்கு முதல் ஆட்டம் கிடைத்ததிலும் மகிழ்ச்சி. ஒரு சில வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். ஒரு சில வீரர்கள் நன்றாக பவுலிங் செய்தனர்.
ஆனால் ஒட்டுமொத்தமாக அது வெற்றிக்குப் போதுமானதாக இல்லை.

வெளியில் காயத்தில் இருக்கும் வீரர்கள் இரண்டாவது ஆட்டத்திற்கு கிடைக்க மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் மூன்றாவது ஆட்டத்திற்கு கிடைக்கலாம். மேக்ஸ்வெல் இந்தியா வந்துவிட்டார். ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

இவர்களை எல்லாம் ஒன்றாகப் பார்ப்பது மகிழ்ச்சியானது. தற்பொழுது எங்களுக்கு உலகக் கோப்பை பெரிய போட்டிகளின் மூலம் இந்த தோல்வியால் ஒரு பார்வை கிடைத்திருக்கிறது. ஆனால் முன்கூட்டியே சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று விதத்தை அமைக்க வேண்டியது அவசியம்! என்று கூறி இருக்கிறார்!