நான் இந்தியாவுல அவர மாதிரி யாரையும் பாக்கல.. நம்ம எதிர்காலம் செம்மையா இருக்கு – ரோகித் சர்மா கருத்து

0
142
Rohit

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்று முடிந்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்த முறை வழக்கமாக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக கொடுக்கப்படும் ஆடுகளங்கள் தரப்படவில்லை. பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் 5 போட்டிகளுக்குமே கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த தொடரில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. மேலும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தோற்று அதிலிருந்து தொடர்ந்து நான்கு போட்டிகளை வென்று இந்திய அணி திரும்பி வந்தது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சுப்மன் கில் அடித்த 30+ ஸ்கோர்தான் இரண்டாவது பெரிய இந்திய பேட்ஸ்மேன் ஸ்கோர் ஆக இருந்தது. ஆனால் ஜெய்ஸ்வால் தனிப்பட்ட முறையில் இரட்டை சதம் அடித்திருந்தார். அதேபோல் இங்கிலாந்து இரண்டு விக்கெட்களுக்கு 114 ரன்கள் என வலிமையாக இருந்தது. பிறகு பும்ரா வந்து ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியை புரட்டி போட்டு இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது

இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது “விசாகப்பட்டினத்தில் பும்ராவின் அந்த ஸ்பெல் நம்ப முடியாத ஒன்று. 35 டிகிரிக்கு மேல் வெயிலில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் வந்து அப்படி ஒரு ஸ்பெல் வீசுவது சாத்தியமற்றது. அப்பொழுது அவர் வந்து பந்தை இரண்டு புறமும் திருப்பி விக்கட்டுகளை வீழ்ச்சி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணிக்காக இந்தியாவில் அப்படி எந்த இந்திய வேகம் பந்துவீச்சாளரும் பந்துவீசி நான் பார்த்தது கிடையாது.

- Advertisement -

அதே போட்டியில் முதலில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார். அணியின் ஸ்கோரில் பாதிக்கு மேல் அவர் எடுத்ததுதான். இரண்டாவது அதிகபட்சமாக 30 ரன்கள் இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்று தொடர் முழுக்க சிறப்பாக செல்ல, அந்தப் போட்டியில் யாராவது எங்களுக்காக கையை உயர்த்த வேண்டிய நிலை இருந்தது. அதை பும்ரா மற்றும் ஜெய்ஸ்வால் செய்தார்கள்.

அடுத்து நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜுரல் மற்றும் குல்தீப் யாதவ் இருவருக்கும் இடையே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் வந்தது. அது தொடரை மாற்றக்கூடிய வகையில் அமைந்தது. நான்காவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தால் தொடர் இரண்டுக்கு இரண்டு என சமநிலை அடைந்திருக்கும்.

இதையும் படிங்க : தோனிய நேர்ல பார்த்தேன்.. 2 மணி நேரம் ஒரு மேஜிக் பண்ணினாரு.. நல்ல நியூஸ் இருக்கு – இர்பான் பதான் பேச்சு

அதே போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தோம். எங்களுக்கு அங்கு ஒரு 40 இரண்டு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அந்த இடத்தில் கில் மற்றும் ஜுரல் இருவரும் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டினார்கள். அழுத்தத்தை எடுத்துக்கொண்டு அந்த சூழ்நிலையில் இளைஞர்கள் இருவரும் விளையாடும் விதத்தைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது இந்த வீரர்களுடன் இந்திய கிரிக்கெட் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது” என்று நான் நினைத்தேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -