0 ரன் 6 விக்கெட்.. தங்கமான வாய்ப்பை வீணடித்த இந்தியா.. மோசமான சாதனையில் பாகிஸ்தானுடன் இணைந்த இந்திய அணி

0
2802

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசி 55 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் சுருட்டியது. இதனால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்தியா இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. யாருமே எதிர்பாராத வகையில் இந்திய அணி வீரர்கள் தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆறு விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து இழந்தனர்.

- Advertisement -

இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் களமிறங்கிய போது ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேற கேப்டன் ரோகித் சர்மா 39 ரன்களும் கில் 36 ரன்களும் எடுத்து வெளியேறின. இதை அடுத்து விராட் கோலி 46 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். கே எல் ராகுல் மட்டும் அதிகபட்சமாக 33 பந்துகளில் 8 ரன்கள் சேர்த்தார்.

ஆனால் மற்ற வீரர்கள் அனைவரும் டக்அவுட் ஆகி வெளியேறினர். 153 ரன்கள் விக்கெட் எடுத்திருந்தபோது இந்த சரிவு தொடங்கியது. முதலில் கே எல் ராகுல் ஆட்டம் இழக்க அதன் பிறகு ஜடேஜா, பும்ரா, விராட் கோலி, சிராஜ், பிரசித் கிருஷ்ணா என அடுத்தடுத்து  வீரர்கள் பெவிலியன் திரும்பினர். இந்தியா வெறும் 11 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி 153 ரன்களில் சுருண்டது.

இதனை அடுத்து 98 ரன்கள் பின்தங்கிய தென்னாபிரிக்க அணி தற்போது இரண்டாவது இன்னிசை தொடங்கி விளையாடி வருகிறது. முதலில் இன்னிங்ஸில் ஆறு பேர் டக் அவுட்டானது மூலம் இந்தியா ஒரு சோகமான சாதனையை படைத்திருக்கிறது. அதாவது ஒரு இன்னிங்ஸில் அதிக டக் அவுட் ஆன அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை இந்தியா சமன் செய்து இருக்கிறது.

- Advertisement -

1980 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆறு பேர் டக் அவுட் ஆகினர். அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் 6 பேர் டக் அவுட் ஆனார்கள். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக வங்கதேசம் விளையாடிய போது ஆறு பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

இந்தியாவும் இதே போல் ஒரு சாதனையை படைத்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 152 ரன்கள் ஆட்டம் இழந்தது. அந்த இன்னிங்ஸில் ஆறு வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறினர்.