இந்தியா-பாகிஸ்தான் ஒரு போட்டியில் வீரர்கள் நிறைய சம்பளம் கேளுங்கள்; மற்றவர்கள் உங்களை வைத்து கல்லா கட்டுகிறார்கள் – கிரிஸ் கெயில் கருத்து!

0
422

பாகிஸ்தான்-இந்தியா மோதும் போட்டியில் மற்றவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். வீரர்களும் நிறைய சம்பளம் வேண்டுமென்று கேட்க வேண்டும் என பேசியுள்ளார் கிரிஸ் கெயில்.

ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் இந்த வருடம் இந்தியாவில் மொத்தம் 10 மைதானங்களில் நடக்கிறது. உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை அண்மையில் மும்பையில் பிசிசிஐ மற்றும் ஐசிசி இரு தரப்பும் இணைந்து வெளியிட்டது.

- Advertisement -

போட்டிகள் துவங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இப்போதிருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. ஏனெனில் கடந்த முறை இந்தியாவில் உலகக்கோப்பை நடந்தபோது தான் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதேபோன்று இம்முறை இந்தியாவில் நடப்பதால், போட்டிகளை காண்பதற்கும் உலககோப்பையை நம் அணி தூக்கும் எனவும் காத்திருக்கின்றனர்.

உலககோப்பையில் அக்டோபர் 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளிக்கக்கூடிய மைதானத்தில் நடக்கிறது. சிக்கலின்றி நடக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அகமதாபாத் மைதானத்திற்கு அருகே இருக்கும் ஹோட்டல் அறைகளில் இப்போதே புக்கிங் துவங்கியது. அறைகளின் விலை அக்டோபர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் விண்ணளவிற்கு உயர்ந்திருக்கிறது. சராசரியாக 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல் அறைகள், பாகிஸ்தான்-இந்தியா போட்டிக்கு முந்தைய நாள் மற்றும் அதே நாள் இரவிற்கு 30 ஆயிரத்தையும் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில ஹோட்டல்களில் ஒரு லட்சம் வரை சென்றிருக்கிறது. இந்த வகையிலும் கல்லா கட்டுகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் கிரிஸ் கையில் அண்மையில் பேசிய பேட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் பற்றியும், அதனால் போட்டியை நடத்தும் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி-க்கு கிடைக்கும் வருமானங்கள் பற்றியும் பேசினார். “கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே தனி மவுசு. இந்த ஒரு போட்டியில் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே வைத்து மொத்த ஐசிசி உலகக்கோப்பை தொடரையும் நடத்திவிடலாம்.

குறிப்பாக டிவி உரிமம் பெற்றவர்கள் இந்தியா-பாகிஸ்தான் ஒரு போட்டியை ஒளிபரப்புவதை வைத்தே மொத்த செலவில் இருந்து பெரும் பகுதியை எடுத்து விடுவர். அந்த அளவிற்கு பலரும் கல்லா கட்டுகின்றனர். ஆனால், போட்டியை ஆடும் வீரர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த சம்பளமே கிடைக்கும் நிலை இருக்கிறது. அவர்களுக்கும் அதற்கேற்ற அளவு சம்பளம் உயர்த்திக்கொடுக்க வேண்டும். அதேநேரம் இதுபோன்ற போட்டிகள் நிறைய வரவேண்டும்.” என்று பேசினார்.