இந்திய அணி செமி-பைனலுக்கு போக தகுதியே கிடையாது – இர்பான் பதான் காட்டமான பேட்டி!

0
10223

ஒருவேளை இப்படி நடந்தால் இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு செல்வதற்கு தகுதியே கிடையாது என்று கடுமையாக பேசியுள்ளார் இர்பான் பதான்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் கிட்டத்தட்ட அரை இறுதி போட்டியை நெருங்கிவிட்டது. குரூப் 1ல் நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலே போதுமானது. நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெற்று விடுவோம்.

குரூப் இரண்டில் ஆறு புள்ளிகளுடன் இந்திய அணி இருக்கிறது. 5 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா அணி இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கின்றன.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி 6 புள்ளிகளுடன் இருக்கும். நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றாலே 7 புள்ளிகள் பெற்று எந்தவித சிக்கலும் இன்றி அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை தோல்வி அடைந்தால் உலக கோப்பையில் இருந்து வெளியேறிவிடும்.

- Advertisement -

வங்கதேசம்/பாகிஸ்தான் மற்றும் (ஜிம்பாப்வே அணியுடன் தோல்வியடையும் பட்சத்தில்) இந்தியா அணிகள் தலா ஆறு புள்ளிகளுடன் இருப்பதால், ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெரும் அணியை முடிவு செய்யப்படும்.

வங்கதேசம் வெற்றி பெரும் பட்சத்தில் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் இந்திய அணி ரன்ரேட் அதிகமாக வைத்திருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தானை வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு சிக்கல் ஏற்படலாம்.

ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா தோல்வியை தழுவிய பிறகும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினால், இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு தகுதியற்ற அணி என்று கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இர்ஃபான் பதான்.

“ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியை தழுவிவிட்டு அரை இறுதிக்கு தகுதி பெற்றாலும், இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு தகுதியற்ற அணி தான். ஜிம்பாப்வே அணியிடம் நல்ல பவுலிங் இருக்கிறது. ஆனால் பேட்டிங் மிகவும் மோசமானதாக இருப்பதால் அவர்களுக்கு பந்துவீச்சில் திணறலை ஏற்படுத்தி விக்கெடுகளை சீக்கிரம் எடுக்க வேண்டும். நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

வங்கதேச அணியிடம் இந்திய அணி எவ்வளவு மோசமாக பந்துவீசியது என்பதை பார்த்தோம். ஒருவேளை மழை குறுக்கிடவில்லை என்றால் ஆட்டம் முழுமையாக வங்கதேச அணியின் பக்கம் திரும்பி இருக்கலாம். ஆகையால் எந்த போட்டியும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு போட்டியிலும் முழு கவனம் செலுத்தி விளையாட வேண்டும். இந்திய அணியிடம் இந்த ஏற்றம் இறக்கம் இருக்கிறது. அதை அரை இறுதி போட்டியில் வெளிப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.