இந்தியா முழுமையான டீம் ; பாகிஸ்தான் ஒரு அரைகுறை டீம்; முன்னாள் பயிற்சியாளர் அதிரடி கருத்து!

0
555
Ind vs Pak

இந்த மாதம் தொடங்கி ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. இந்த டி20 உலகக்கோப்பைக்காக பங்கேற்கும் 16 அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்து இருக்கின்றன!

பெரிய கிரிக்கெட் அணிகளில், உலகக் கோப்பை காக அறிவிக்கப்பட்ட அணியில் அதிக விமர்சனங்களை சந்தித்தது இந்தியாவும் பாகிஸ்தான் அணி அறிவிப்புதான்.

- Advertisement -

இந்திய அணி அறிவிப்பு முகமது சமிக்கு ஏன் 15 பேர் கொண்ட அணியில் இடம் இல்லை என்றும், சஞ்சு சாம்சனுக்கு ஏன் ரிசர்வு வீரராக கூட இடமில்லை என்றும் பெரிய கேள்விகளும் விவாதங்களும் உருவானது.

பாகிஸ்தான் அணியை எடுத்துக்கொண்டால், அந்த அணியின் தேர்வுக்குழு தலைவரே, தங்கள் அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருக்கிறது என்று கூறுமளவுக்கு இருக்கிறது. பாகிஸ்தான் அணி அமைப்பில் நிறைய உள்குத்து வேலைகள் நடப்பதாக புகார்கள் முன்னாள் வீரர்களிடமிருந்து வர ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்திய அணியில் இப்படிப்பட்ட புகார்கள் எதுவும் இல்லை!

தற்போது இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் இடம் உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகளை ஒப்பிட்டு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிகத் தெளிவாக வெளிப்படையாக பதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி பேசி உள்ள சஞ்சய் பாங்கர்
“ஆசியக் கோப்பையில் டீம் இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக சில நல்ல ஆட்டங்களை விளையாடியிருக்கிறது. மேலும் இந்திய அணியை எடைபோட்டு பார்த்தால் இந்திய அணி ஒரு முழுமையான அணியாகும். இந்த அணி ஒன்று அல்லது இரண்டு வீரர்களை நம்பி கிடையாது” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி டாப் ஆர்டரில் விளையாடும் பாபர் மற்றும் ரிஸ்வானைத்தான் அதிகம் நம்பி உள்ளதாக நான் நினைக்கிறேன். ஆனால் இந்திய அணியில் நான்கு முதல் ஐந்து மேட்ச் வின்னிங் வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய அணி வெறும் இரண்டு வீரர்களை மட்டும் நம்பி கிடையாது. இந்த வகையில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட மேன்பட்ட நிலையில் தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்!

- Advertisement -