நான் நெட்ஸில் நல்லாவே ஆடுறேன்.. ஃபார்ம்ல இல்லைன்னு சொல்ல முடியாது.. ரன்தான் வரல – சூரியகுமார் பேச்சு

0
5
Surya

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அடிப்படைகளுக்கு திரும்பியதால் வெற்றி பெற முடிந்ததாக இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 117 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா அணி 15.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருந்த போதிலும் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் கில் இருவரது பேட்டிங்கும் மோசமாகவே இருந்தது.

- Advertisement -

அடிப்படைகளுக்கு திரும்பினோம்

இந்த போட்டியில் வெற்றி குறித்து பேசி உள்ள சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “இந்த விளையாட்டு நமக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. ஒரு தொடரில் ஒரு தோல்விக்கு பிறகு நீங்கள் எப்படி திரும்பி வருகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதையே நாங்களும் செய்தோம். முதல் போட்டியில் செய்தது போலவே அடிப்படைக்கு திரும்ப வேண்டும் என முடிவு செய்தோம். அதையே நாங்கள் செய்தோம். அதற்கான பலனும் கிடைத்தது”

“கடந்த சண்டிகர் போட்டியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேச வேண்டிய சில முக்கிய விஷயங்களை பேசினோம். ஒரு நல்ல டீம் மீட்டிங் நடந்தது. மேலும் நாங்கள் முதல் போட்டிக்கு எப்படி பயிற்சி செய்தோமோ, அதே போல இந்த போட்டிக்கும் பயிற்சி செய்தோம்”

- Advertisement -

நான் பார்ம் அவுட் கிடையாது

“மேலும் இந்த போட்டியில் நாங்கள் எதையும் புதிதாக முயற்சி செய்யவில்லை. இப்பொழுது நான் வலைப்பயிற்சியில் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருக்கிறேன். மேலும் என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் நான் செய்து கொண்டிருக்கிறேன்”

இதையும் படிங்க : கேமரா அனைத்தும் உங்கள தான் பாத்துச்சு.. நீங்க ட்ரெஸ்ஸிங் ரூம்ல ஒளியாதீங்க சூர்யா – கேப்டனை சாடிய முகமது கைஃப்

“மேட்ச் வரும்பொழுது, ரன்கள் வரவேண்டிய நேரத்தில், அவை நிச்சயமாக வரும். நான் பார்மில் இல்லை என்று சொல்ல மாட்டேன். என்ன ஒன்று ரன்கள் மட்டுமே வராமல் இருக்கிறது. இன்று இரவு இந்த வெற்றியை கொண்டாடுவோம். பிறகு லக்னோ போய் இந்த போட்டியில் என்ன நடந்தது என கூர்மையாக உட்கார்ந்து பேசுவோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -