இந்திய கிரிக்கெட்

கம்மின்ஸ்க்கு தெரியாமல் அந்த குற்றம் நடக்க வாய்ப்பில்லை.. 2018ல் நடந்த உண்மை இதுதான் – வாசிம் அக்ரம் பேச்சு

​பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் சாண்ட்பேப்பர் சர்ச்சை குறித்த கருத்துகள் மற்றும் தனக்கு எதுவும் தெரியாது என்ற அவரது வாதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​பேட் கம்மின்ஸ் தனக்கு இந்த விவகாரம் குறித்து எப்போதும் தெரியாது என்று கூறியதை வாசிம் அக்ரம் கடுமையாக மறுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

​இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும்போது “பிக்சில் ஒன் பவுன்ஸ் செய்வது மற்றும் சாண்ட்பேப்பர் கொண்டு கீறுவது இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை; ஒரு பவுலராக எனக்கு அது தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

மேலும் அவர் பேசும்போது “ஒரு பவுலராக, நான் பந்தைக் கையில் எடுக்கும்போது அது எதாவது ஓவரில் இருந்தாலும், பழைய பந்தாக இருந்தாலும், அதன் தன்மையை உடனடியாக என்னால் தெரிந்து கொள்ள முடியும். சாண்ட்பேப்பர் கீறல்கள் வழக்கமான கீறல்களை விட முற்றிலும் மாறுபட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -
Published by