இந்திய கிரிக்கெட்

U19 உலகக் கோப்பை.. 13 ஓவரில் நியூசியை பந்தாடிய சூரியவன்சி ஆயுஸ் மாத்ரே.. இந்தியா பிரம்மாண்ட வெற்றி

இன்று 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

தற்போது இந்த உலகக் கோப்பை தொடர் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. மழைக்கு நடுவே நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சுருண்ட நியூசிலாந்து அணி

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலில் தடுமாறியது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. ஒரு அளவுக்கு போட்டியளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து ஒட்டுமொத்தமாக சுருண்டது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக காலும் சாம்சன் 38 ரன், செல்வின் சஞ்சய் 28 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அம்ரிஷ் நான்கு விக்கெட்டுகள் மற்றும் ஹெனில் படேல் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இந்திய அணி அபார வெற்றி

இதைத்தொடர்ந்து விளையாட வந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் 6 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் அதிரடியாக வைபவ் சூரியவன்சி 23 பந்தில் 40 ரன்கள், கேப்டன் ஆயுஸ் மாத்ரே 27 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : இஷான் கிஷானுக்கு பேட்டை தூக்கி காட்டுற எண்ணமே கிடையாது.. உண்மையாலுமே ஆச்சரியப்பட்டேன் – சடகோபன் ரமேஷ் பேச்சு

இவர்களது அதிரடியால் இந்திய அணி வெறும் 13.2 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -
Published by