நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இஷான் கிஷான் தனிப்பட்ட ரன் குறித்த எந்த கவலையும் இல்லாமல் விளையாடினார் என சடகோபன் ரமேஷ் பாராட்டி இருக்கிறார்.
சில ஆண்டுகளாக இந்திய அணிகளில் இருந்து இஷான் கிஷான் ஒழுங்கு நடவடிக்கைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். மீண்டும் இந்திய அணியில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தியதோடு அதிரடியாகவும் விளையாடி அசத்தியிருக்கிறார்.
நான் பயந்தேன்
தற்போது இது குறித்து பேசி இருக்கும் சடகோபன் ரமேஷ் கூறும் பொழுது “இஷான் ஒன்று பந்தை அடிக்க வேண்டும் இல்லையென்றால் தவறவிட வேண்டும் என்கின்ற முறையில்தான் விளையாடினார். அவர் முதல் போட்டியிலும் கூட அப்படியே விளையாடினார். அப்போது அவர் விரைவாக ஆட்டமிருந்து விட்டதால் முதல் 15 முதல் 20 ரன்கள் பொறுமையாக விளையாடுவார் என பயந்தேன். ஆனால் நான் நினைத்தது போல் அவர் விளையாடவில்லை”
“இது அவருக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக இருந்தது. மேலும் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன் எடுத்த இந்திய அணிக்கு வந்தார். இதனால் அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விளையாடியது போல ஒரு இடத்திலுமே தெரியவில்லை”
பேட்டை காட்டும் எண்ணம் இல்லை
“அவர் அதிரடியாக விளையாடினார். அரை சதம் மற்றும் சதம் அடிப்பது பேட்டை தூக்கி காட்டுவது போன்றவற்றில் அவருக்கு எந்த ஈடுபாடும் இல்லாதது போல் இருந்தது. அவருக்கு தாக்கத்தை செலுத்த வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. அவர் உண்மையில் தனக்காக விளையாடவே இல்லை. பந்துவீச்சாளர்களை தாக்கி விளையாட வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது”
இதையும் படிங்க : சூரியகுமார் நடக்கிற தப்பை ஏற்றுக்கிட்டார்.. அதுக்கு தான் இத மாத்தி விளையாடினார் – பார்த்திவ் படேல் பேச்சு
“அடுத்து திலக் வந்த பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆழம் மிகவும் வலிமையாக மாறும். ஏனென்றால் சஞ்சு சரியாக விளையாட விட்டாலும் கூட அவருக்கு சரியான பேக்கப் இஷான் இருக்கிறார். ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது இந்திய அணியின் பெஞ்ச் வலிமை இன்னும் கூடுதலாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






