தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் தனது கிராயின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் வரும் சனிக்கிழமை கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ள இரண்டாவது டி20 போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சீதான்சு கோடக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் சீதான்சு கோடக் இதுகுறித்து ஊடகங்களிடம் பேசும்போது, “பல வகையான ஊகங்கள் பரவுவதை நானும் பார்த்தேன். இஷானுக்கு கிராயின் பகுதியில் ஸ்ட்ரெய்ன் ஏற்பட்டதன் காரணமாகவே பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது. அவர் நாளைய போட்டியிலும் விளையாடுவது சந்தேகம்தான். மெடிக்கல் டீம் முழுமையாக குணமடைந்துவிட்டதாக பரிந்துரைக்கும் வரை அவர் விளையாட மாட்டார். ஒருவேளை இஷான் விளையாடவில்லை என்றால், அவருக்கு மாற்றாக வைபவ் சூர்யவன்ஷி பிளேயங் லெவனில் கண்டிப்பாக களமிறங்கலாம். அவர் அதற்கான வலிமையான வீரர்களில் ஒருவராவார்” என்று கூறி இருக்கிறார்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பவர்ஃபுல்லான சேஸிங் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. எனினும், வழக்கமாக களமிறங்கும் நம்பர் 3 பொசிஷனில் இஷான் கிஷன் களமிறங்காமல் திலக் வர்மா களமிறங்கியது பல கேள்விகளை எழுப்பியது. இந்தத் தொடரில் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்ச்சில் அமரவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பேசுகையில், அணியில் ஏற்கனவே அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் வைபவ் சூர்யவன்ஷி தனது வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டும் என்று விளக்கமளித்திருந்தார். மேலும் வெளிநாடுகளில் உள்ள பிட்ச்களில் விளையாடும்போது இளம் வீரர்கள் எதிர்காலத்தில் அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள இது உதவும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி பல ரன்களைக் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தற்போதைய சூழலில் அணியின் தேவைக் கேற்ப பிளேயிங் லெவனில் மாறுதல்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.