இந்தியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில் இந்தியா சி அணி முதல் இன்னிங்ஸ் விளையாடி முடிந்ததை அடுத்து தற்போது இந்தியா பி அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இதில் இந்தியா பி அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடி தனது அணியை காப்பாற்றி இருக்கிறார். மேலும் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் கணிசமான பங்களிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்திய ஒரு சில சீனியர் வீரர்களை தவிர சர்வதேச வீரர்கள் மற்றும் உள்ளூர் வீரர்கள் பங்குபெறும் புகழ்பெற்ற டெஸ்ட் வடிவ கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில் நான்காவது ஆட்டத்தில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் விளையாடி வருகின்றன. இதன் முதல் பேட்டிங் செய்த இந்தியா சி அணி தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓவர்களில் 525 ரன்கள் குவித்து இருக்கிறது.
இந்தியா சி அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்களும், மனவ் சுதர் 82 ரன்களும் இந்திரஜித் 78 ரன்களும் சாய் சுதர்சன் 43 ரன்களும், கேப்டன் ருத்ராட்ச் 58 ரன்களும் குவித்தனர். இந்தியா பி அணித்தரப்பில் ராகுல் ஜகாத் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள் அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்சை இந்தியா பி அணி விளையாடியது.
பி அணியில் ஜெகதீசன் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் குவித்த நிலையில் ஜெகதீசன் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு சி அணியின் பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ் மிகச் சிறப்பாக பந்து வீசி இந்தியா பி அணியின் விக்கெட்டுகளை வரிசையாக சாய்த்தார். தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்ற விளையாட மற்ற வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களில் வெளியேறினர்.
குறிப்பாக சப்ராஸ்கான் 16 ரன்களும், ரிங்கு சிங் 6, வாஷிங்டன் சுந்தர் 13, நித்திஷ் ரெட்டி இரண்டு ரன்களிலும் வெளியேறினார்கள். இவர்களில் வாஷிங்டன் சுந்தரி தவிர மற்ற வீரர்கள் அன்சுல் கம்போஜ் பந்துவீச்சுக்கு இறையானார்கள். இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியாவில் தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:என் ஊரு கோவா.. அதான் பிசிசிஐ கோச் பதவி தரல.. இந்த விஷயத்துல கோலி தோனியை பாராட்டுறேன் – ஜான்டி ரோட்ஸ் பேட்டி
இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடி 262 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 143 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். இதில் பி அணியின் பந்துவீச்சாளர் அன்சில் கம்போஜ் 23.5 ஓவர்களில் 66 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.