என் ஊரு கோவா.. அதான் பிசிசிஐ கோச் பதவி தரல.. இந்த விஷயத்துல கோலி தோனியை பாராட்டுறேன் – ஜான்டி ரோட்ஸ் பேட்டி

0
230

டி20 உலக கோப்பைக்கு பிறகு ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக வேறு சில பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ஃபீல்டிங் பயிற்சியாளராக தன்னை நியமிக்காததை அடுத்து உலகின் புகழ்பெற்ற தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸ் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பிரபல இந்திய முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருடன் ஐபிஎல் தொடர்களில் இணைந்து பணியாற்றிய டெஸ்கோத்தே மற்றும் மோர்கல், அபிஷேக் நாயர் போன்ற வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து கேட்டு வாங்கிக் கொண்டார். அதேபோலவே லக்னோ அணியில் பயிற்சியாளர் கம்பீருடன் பில்டிங் பயிற்சியாளராக இணைந்து பணியாற்றியவர் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ்.

எனவே இவர் இந்தியாவின் அடுத்த ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் அவருக்கு பதிலாக டி திலீப் என்பவர் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தன்னை பிசிசிஐ அடுத்த பயிற்சியாளராக கருத்தில் கொள்ளாததை அடுத்து நானும் இந்தியாக்காரன்தான் ஆனால் இந்தியா வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்பவில்லை என்ற ஜாலியான வகையில் தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார். மேலும் பீல்டிங் துறையில் முன்னேற்றத்தை கொண்டு வந்ததற்காக மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “உங்களால் நம்ப முடிகிறதா? பிசிசிஐ ஒரு சர்வதேச பயிற்சியாளரை விரும்பவில்லை. நானும் இந்தியாவின் உள்ளூர் காரன் தான். அதாவது மேரா நாம் ஜான்டி ரோட்ஸ். ஒருவேளை நான் கோவாவில் இருப்பதால் அவர்கள் என்னை நிராகரித்திருக்கலாம். நான் ஏதாவது ஒரு மெட்ரோ சிட்டியில் குடி பெயர வேண்டும். இந்திய அணியில் கடந்த இரண்டு பீல்டிங் பயிற்சியாளர்களை நான் பாராட்ட வேண்டும்.

தோனி கேப்டனாக இருந்த காலத்தில் நிறைய சீனியர் வீரர்கள் இருந்தனர். அப்போது தோனி நிறைய உடல் திறனை காண்பித்தார். தனது 40 வயதில் கூட ஐபிஎல் தொடரில் விளையாடி பிட்னஸ் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறார் அவருக்கு அடுத்ததாக பொறுப்பேற்ற கேப்டன் விராட் கோலியும் பிட்னஸ் தேர்வை ஒரு அங்கமாக மாற்றி இருக்கிறார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் உடல் தகுதியில் கவனம் செலுத்தவில்லை என்றால் எதிலும் அசத்த முடியாது.

இதையும் படிங்க:கோலி இல்லை.. இந்திய அணியின் ஃபிட்டான வீரரை தேர்வு செய்த பும்ரா.. விராட் ரசிகர்கள் விமர்சனம்

பிட்னஸிலும் இந்தியா அசத்துவதால் தான் பில்டிங்கில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது” என்று கூறி இருக்கிறார். ஜான் டி ரோட்ஸ் தனது மகளுக்கு இந்தியா என்று பெயர் சூட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -