231 ரன்.. ஹர்திக் பாண்டியா ஸ்பெஷல் சாதனை.. திலக் வர்மாவின் தொடரும் அசத்தல்.. இந்திய அணி ரன் குவிப்பு

0
128
Hardik

இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஐந்தாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா அதிரடியில் இந்தியா 231 ரன்கள் குவித்து இருக்கிறது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் பனிப்பொழிவின் காரணமாக ரத்தாகியது. மீதி 3 கோடிகளில் இந்தியா இரண்டு தென் ஆப்பிரிக்கா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. இந்த நிலையில் இந்தியா இந்த போட்டியை வென்றால் தொடரை வெல்லும் என்ற நிலையில் களம் இறங்கியது. துணை கேப்டன் கிரில் காலில் ஏற்பட்ட காயத்தால் விளையாடவில்லை.

- Advertisement -

சிறப்பான தொடக்கம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 37 ரன், அபிஷேக் ஷர்மா 21 பந்தில் 34 ரன் எடுத்தார்கள். இதனால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது.

இதற்கு அடுத்து பேட்டிங் வரிசையில் நான்காவதாக வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 7 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து 22 டி20 போட்டிகளாக அவர் அரைசதம் ஏதும் அடிக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து அதிரடியில் மிரட்டினார்கள்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா சாதனை

ஒரு முனையில் திலக் வர்மா சரியான பொறுப்புடன் விளையாட இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்டியா அதிரடியில் மிரட்டினார். வெறும் 16 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் அரை சதம் அடித்து 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்தார்.

இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 42 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க : 138 ரன்.. U19 பைனலுக்கு இந்தியா தகுதி.. இலங்கை அணியை வென்றது.. ஆர்சிபி இளம் வீரர் அதிரடி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்து இந்திய வீரராக அபிஷேக் ஷர்மா 17 பந்தில் அரை சதம் அடித்தார். தற்போது ஹர்திக் பாண்டியா 16 பந்தில் இந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.

- Advertisement -