இன்று அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இந்தத் தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறுகிறது. ஆனால் இன்று தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினால் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இலங்கை தடுமாற்றம்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு விமத் தின்சார 29 பந்தில் 32 ரன், சமிகா 38 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்கள்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஹெனில் படேல் மற்றும் கனிஷ்க் சௌகான் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் கிஷான் குமார் சிங், தேவேந்திரன், கிலான் படேல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
நட்சத்திர வீரர்கள் ஏமாற்றம்
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு நட்சத்திர வீரர்கள் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 8 பந்துகளில் 7 ரன்கள், அதிரடி இளம் ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி 6 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே வெளியேற இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஆரோன் ஜார்ஜ் மற்றும் ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்டு இருக்கும் வியான் மல்கோத்ரா இருவரும் பொறுப்பாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் விளையாடி அரை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்கள்.
இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பை இந்திய அணி.. ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட கணிப்பு
ஆரோன் ஜார்ஜ் 49 பந்துகளில் 58* ரன், வியான் மல்கோத்ரா 45 பந்துகளில் 61* ரன் எடுக்க, இந்திய அண்டர் 19 அணி 18 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்த அரை இறுதியில் பங்களாதேஷ் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






