இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு இந்திய ஏ அணி பதிலடி.. சாய் சுதர்சன் ஆர்சிபி பவுலர் அசத்தல் பர்பாமென்ஸ்

0
202
Sai

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்திய ஏ அணிக்கு எதிராக மோதும் மூன்றாவதுநான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி, நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து ஏ அணியின் கேப்டன் துவக்க ஆட்டக்காரருமான அபிமன்யு ஈஸ்வரன் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். சாய் சுதர்சன் ஏழு ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய ஏ அணியில் திலக் வர்மா 22, சரண்ஸ் ஜெயின் 64, தேவ்தத் படிக்கல் 65 ரன்கள் எடுத்தார்கள். ரிங்கு சிங் இந்த போட்டியிலும் ரன் இல்லாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 50.2 ஓவரில் இந்திய ஏ அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்துவீச்சாளர் மேத்யூ பாட்ஸ் 6, பிரைடன் கார்ஸ் 4 விக்கட்டுகள் கைப்பற்றினார்கள்.

தனது முதல் இன்னிசை விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 64 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஒலிவர் பிரைஸ் 31 ரன்கள் எடுக்க, 64.3 ஓவரில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்திய அணி பந்துவீச்சில் திருப்பி பதிலடி கொடுத்தது. இந்திய அணியின் தரப்பில் பெங்கால் மற்றும் ஆர்சிபி அணியின் வீரர் ஆகாஷ் தீப் 4, யாஷ் தயால் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய ஏ அணிக்கு துவக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 22, தேவ்தத் படிக்கல் 21, கடைசி நேரத்தில் திலக் வர்மா 46 என ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : “அவர் வெளியே காத்துகிட்டு இருக்கார்.. நல்லா விளையாடலனா அவ்வளவுதான்” – கில்லுக்கு ரவி சாஸ்திரி மறைமுக எச்சரிக்கை

இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் துவக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் ஆட்டம் இழக்காமல் 54 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்திருக்கிறது. இதன் மூலம் 141 ரன் முன்னிலையும் பெற்றிருக்கிறது. நாளை இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்தால், அதை இங்கிலாந்து லயன்ஸ் அணி துரத்துவது கடினம். இந்த தொடரை இந்திய ஏ அணியும் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.