“அவர் வெளியே காத்துகிட்டு இருக்கார்.. நல்லா விளையாடலனா அவ்வளவுதான்” – கில்லுக்கு ரவி சாஸ்திரி மறைமுக எச்சரிக்கை

0
187
Gill

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் ரோகித் சர்மாவுக்கு அடுத்து அதிக ரன்கள் அடித்த அனுபவ வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின்தான் இருக்கிறார்.

விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிக இளமையாகவும் அதே சமயத்தில் அவர்கள் தங்களை நிரூபிக்க முடியாமல் தடுமாறுவதால் பலவீனமாகவும் காணப்படுகிறது.

- Advertisement -

இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனி ஒரு பேட்ஸ்மேனாக நின்று ஜெய்ஸ்வால் 179 ரன்கள் குவித்ததோடு, மேற்கொண்டு நாளை விளையாடுவதற்கும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்.

இந்திய அணி தற்பொழுது ஆறு விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதால் ஜெய்ஸ்வால் நாளையும் இரண்டு செசன் விளையாட வேண்டியது முக்கியமாகிறது.

இன்று நடைபெற்ற முதல் நாளில் ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தபடியாக கில் 34 ரன்கள் எடுத்திருக்கிறார். இதைத் தாண்டி ஒரு பேட்ஸ்மேன் கூட ரன்கள் எடுக்கவில்லை.

- Advertisement -

மேலும் ரஜத் பட்டிதார் அதிர்ஷ்டம் இல்லாமல் ஆட்டம் இழந்து இருக்கிறார். மற்றபடி கேப்டன் ரோஹித் சர்மா வரை தவறான முறையில் விளையாடும் விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக கில் டிக்கெட்டை மலிவான முறையில் இழந்து வருகிறார்.

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்கு வெளியில் இளம் வீரர்கள் மட்டுமில்லாமல் அனுபவ வீரர் புஜாராவும் இருக்கிறார். அவர் தற்பொழுது ரஞ்சி சீசனில் சிறப்பாக ரன்கள் குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “ரோகித் டிராவிட் பாய் சொன்னாங்க.. என் தனி பிளான் இதுவாதான் இருந்தது” – ஜெய்ஸ்வால் பேட்டி

இதுகுறித்து பேசி உள்ள ரவி சாஸ்திரி கூறும் பொழுது “இது ஒரு புதிய அணி. இளம் வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். இளம் வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும். மறந்துவிட வேண்டாம் வெளியில் புஜாரா காத்திருக்கிறார். அவர் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் காரணமாக அவர் தேர்வுக்குழு ரேடாரில் இருக்கிறார் என்பது முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.