INDA vs ENGL.. 32 ஓவரில் அதிரடி.. சுருண்டது இங்கிலாந்து லயன்ஸ்.. படிக்கல் அதிரடியில் இந்தியா ஏ வலுவான முன்னணி

0
675
Dev

தற்போது குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா ஏ அணிக்கும், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையே நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடைபெற்று வருகிறது.

முதலில் நடந்த போட்டியில் மானவ் சுதார், ரஜத் பட்டிதார், சாய் சுதர்சன், கேஎஸ்.பரத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால், இந்திய ஏ அணி தோல்வியின் விளிம்பில் இருந்து ஆட்டத்தை டிரா செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று துவங்கிய இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆனால் முதல் போட்டி போல் இல்லாமல் இந்திய ஏ அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்காமல் 52.4 ஓவரில் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிரின்ஸ் மட்டும் தாக்குப் பிடித்து 48 ரன்கள் எடுத்தார்.

இந்திய ஏ அணியின் தரப்பில் பெங்கால் வீரரான ஆகாஷ் தீப் 4 விக்கெட் கைப்பற்றினார். யாஸ் தயால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இந்த முறை கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு மிகச் சிறப்பாக விளையாடி வரும் தேவ்தத் படிக்கல் இருவரும் களமிறங்கினார்கள்.

இதையும் படிங்க : “ஓபனா சொல்றேன்.. ஐபிஎல்-ல இந்த டீமும் ரசிகர்களும்தான் வேற லெவல்” – மேத்யூ ஹைடன் வெளிப்படையான கருத்து

இந்த ஜோடி இன்று 32 ஓவர்களை சந்தித்து விக்கெட்டை கொடுக்காமல் அதிரடியாக 150 ரன்கள் குவித்து இருக்கிறது. அபிமன்யு ஈஸ்வரன் 96 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்திருக்கிறார். படிக்கல் 96 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் குவித்திருக்கிறார்.

மேற்கொண்டு இந்திய ஏ அணி இரண்டாவது நாளில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்யும் பட்சத்தில், இந்த இரண்டாவது போட்டியை வென்று தொடரையும் கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.