கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ரன் அவுட்டால் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் போச்சு.. யார் மீது தவறு? சந்தேகத்தை எழுப்பும் கும்ப்ளே

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ரன்-அவுட் ஆனதில் யார் மீது தவறு இருக்கிறது என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே பேசியுள்ளார்.ஜெய்ஸ்வால் பந்தை அடித்து விட்டு ரன் ஓடினார்.

- Advertisement -

ஆனால் மறு முனைக்கு அவரால் செல்ல முடியவில்லை.ஏனெனில் அவர் பந்தை நேராக பீல்டருக்கு அடித்திருந்தார். இதை பார்த்த கில் ஓடவில்லை. ஆனால் ஜெய்ஸ்வால் பாதி தூரம் வந்துவிட்டார். இதனால் டேகனரைன் சந்தர்பால் எறிந்த துல்லியமான த்ரோவை டெவின் இம்லாக் பயன்படுத்தி ரன் அவுட் செய்தார்.

யார் மீது தவறு?

இதனால், ஜெய்ஸ்வால் தனது தலையைத் தட்டிக்கொண்டு, கில்லுடன் சில வார்த்தைகளை பரிமாறிக்கொண்டார்.இது குறித்து பேசிய கும்ப்ளே, “இது நாம் எதிர்பார்க்காத ஒன்று. ஜெய்ஸ்வால் இப்படி ஒரு தவறு செய்வார் என்று நினைக்கவே இல்லை. அவர் அந்த ஷாட்டை மிகவும் நன்றாக ஆடியிருக்கலாம்.”

“பந்து பீல்டரை தாண்டி செல்லும் என்று நினைத்து, ரன் ஓடி சென்றிருக்கலாம். மிட்-ஆஃப் பீல்டருக்கு நேராக பந்து சென்றதால், அவர் மறு முனையை அடைய வாய்ப்பே இல்லை.” 23 வயதான ஜெய்ஸ்வால், இரண்டாவது நாளில் 173 ரன்களுடன் தனது இன்னிங்ஸை தொடர்ந்தார்.ஆனால் இரண்டு ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

- Advertisement -

சந்தேகம் கிளப்பிய கும்ப்ளே:

இதனால் 3வது முறையாக இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை அவர் இழந்தார். இது குறித்து பேசிய கும்ப்ளே, “கீப்பர் பெயில்களை அகற்றும்போது பந்து அவர் கையில் இருந்ததா அல்லது அதற்கு முன்பே வெளியேறிவிட்டதா என்பதில் மட்டுமே சந்தேகம் இருந்தது.ஆனால் நடுவர் மூன்றாவது நடுவரிடம் கூட பரிந்துரைக்கவில்லை. இது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.”

இதையும் படிங்க: 518 ரன்.. 5 வது சதம்.. விராட் கோலியின் மெகா சாதனையை சமன் செய்த கில்.. இந்திய அணி அபார பேட்டிங்

“ஆனால் இறுதியில், இது ஜெய்ஸ்வாலின் தவறு தான். அவர் நீண்ட, நீண்ட இன்னிங்ஸ் ஆடுவார் என்று நினைத்தேன். அவரது அணுகுமுறை சற்று வித்தியாசமாக இருந்தது. முதல் நாள் காலை செஷனில் இருந்த அணுகுமுறைக்கு அவர் திரும்புவார் என்று நினைத்தேன்.ஆனால் முதல் நாள் மாலை அவர் எப்படி ஆடினாரோ, அதே பாணியில் தொடர்ந்தார். இது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.” என்று கும்ப்ளே கூறினார்.

- Advertisement -
Published by

Recent Posts