இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து விராட் கோலியின் பிரம்மாண்டமான சாதனையை சமன் செய்திருக்கிறார்.
இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் ஜெய்ஸ்வால் 175 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் கில் சதம் அடித்து அசத்தினார்.
ஏழு போட்டியில் ஐந்தாவது சதம்
நேற்று முதல் நாள் முடிவில் மிகவும் பொறுமையாக விளையாடிய கேப்டன் பில் இன்று நாளின் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை அடித்தார்.
மேலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற ஏழாவது போட்டியில் கில் தன்னுடைய ஐந்தாவது சதத்தையும் அடித்து அசத்தியிருக்கிறார். மேலும் இந்த வருடம் 2025 ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து டெஸ்ட் சதங்களை கேப்டனாக கில் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி சாதனை சமன்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஒரு வருடத்தில் அதிக சதங்கள் அடித்தவராக விராட் கோலி இரண்டு முறை ஐந்து சதங்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு டெஸ்ட் கேப்டனாக கில் ஐந்து சதங்கள் எடுத்து இந்த சாதனையை சமன் செய்திருக்கிறார்.
மேலும் இந்த போட்டியில் கில் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து 196 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 129 ரன்கள் எடுத்தார். மேலும் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருக்கிறது.
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் நிச்சயமாக சேவாக் கிடையாது.. இந்த பையன் இந்த மாதிரி மேஜிக் வச்சிருக்கார் – இந்திய முன்னாள் வீரர் பேச்சு
ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் சதங்களை அடித்த இந்திய கேப்டன்:
5 – விராட் கோலி (2017)
5 – விராட் கோலி (2018)
5- ஷுப்மான் கில் (2025)*
4 – சச்சின் டெண்டுல்கர் (1997)
4 – விராட் கோலி (2016)






