மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒரே நாளில் மூன்று சதம் அடித்து அசத்தியுள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்திருந்தது.
இதன் மூலம் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோரை விட 286 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்று இருக்கிறது.121 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோரை விட வெறும் 41 ரன்கள் தான் இந்தியா பின்தங்கி இருந்தது.
இந்தியா ரன் குவிப்பு:
ராகுல் 53 ரன்களுடனும் கில் 18 ரன்களுடனும் தங்களது ஆட்டத்தை தொடங்க சிறப்பாக விளையாடி இருவரும் இந்தியாவின் இன்னிங்சை கட்டமைத்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.
இதில் சிறப்பாக விளையாடிய ராகுல் தன்னுடைய 11 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
இது போன்று இந்திய அணி கேப்டன் கில் 50 ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன துருவ் ஜுரல் மற்றும் இந்திய அணியின் தற்காலிகத் துணை கேப்டனான ஜடேஜா ஆகியோர் களத்தில் நின்றனர்.இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினர்.
ஜடேஜா, ஜூரல் அபாரம்:
நேற்று விக்கெட் கீப்பிங் பணியை சிறப்பாக செய்த ஜூரல் இன்று தாமும் ஒரு பேட்ஸ்மேன் என்பதையும் நிரூபித்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர் வீசிய பந்தை லாபகமாக ரன்கள் சேர்த்து அவர் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். மறுமுனையில் ஜடேஜா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: இந்திய அணிக்காக கூட இல்ல.. இந்திய ஏ அணிக்காக, சகோதரியின் திருமணத்தில் பங்கேறாத அபிசேக் சர்மா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
முதலில் 50 ரன்கள் கடந்ததன் மூலம் ஒரே ஆண்டில் இந்திய டெஸ்ட் அணியில் ஆறாவது அதற்கு கீழ் களம் இறங்கி 7 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற லக்ஷ்மண் சாதனையை ஜடேஜா சமன் செய்து இருக்கின்றார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய அவர் 104 ரன்கள் அடித்திருக்கிறார். மறுமுனையில் கெத்து காட்டி வந்த துருவ் ஜுரல் 125 ரன்கள் எடுத்தார்கள். இதன் மூலம் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து இருக்கிறது.






