இந்திய அணிக்காக கூட இல்ல.. இந்திய ஏ அணிக்காக, சகோதரியின் திருமணத்தில் பங்கேறாத அபிசேக் சர்மா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

0
77
Abhishek

இந்தியா ஏ அணியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது 50 ஓவர் போட்டிகளுக்கு அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் போட்டிகள் ஆஸ்திரேலியா A அணிக்கு எதிராக இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் கான்பூரில் நடைபெறுகிறது.2025 ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அபிஷேக் அந்தத் தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார்.

ஒன்பது முறை ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய பிறகு, அபிஷேக் தனது சகோதரி கோமல் சர்மாவின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் லூதியானாவில் கலந்து கொண்டார்.
அந்த விழாவில், அவர் தனது வழிகாட்டியான யுவராஜ் சிங்குடன் இணைந்து நடனமாடினார். கோமலின் திருமணம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. ஆனால், இது இந்தியா A அணியின் இரண்டாவது 50 ஓவர் போட்டியும் அதே நாளில் நடக்கிறது.

- Advertisement -

திருமணத்திற்கு செல்லவில்லை:

டி20 கிரிக்கெட்டில் தனித்துவமாக விளங்கும் அபிஷேக், இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்தினால், 50 ஓவர் கிரிக்கெட்டில் தனது திறமையை தேர்வாளர்களுக்கு நிரூபிக்க முடியும்.

இந்த இரண்டு போட்டிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த அபிஷேக், தனது சகோதரியின் திருமணத்தை தவிர்த்துவிட்டு, இந்தியா ஏ அணியின் பிளேயிங் XI-ல் இடம்பெற்று உள்ளார்.ஆனால், இந்த ஆட்டத்தில் அவர் டக் அவுட்டானார். 25 வயதான அபிசேக்,, 61 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி, 35.33 சராசரியுடனும், 99.21 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 2014 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய தொடர் அட்டவணை:

அவருக்கு எட்டு அரைசதங்களும், நான்கு சதங்களும் உள்ளன. மேலும், இந்த வடிவத்தில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரம் 4/56 ஆகும்.ஆசியக் கோப்பையில், இறுதிப் போட்டியைத் தவிர, அனைத்து போட்டிகளிலும் அபிஷேக் இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்தார்.
ஏழு இன்னிங்ஸ்களில் 314 ரன்கள், 44.86 சராசரி மற்றும் 200 ஸ்ட்ரைக் ரேட் உடன் முடித்தார்.

இதையும் படிங்க: இந்தியா NO 1 டீம்.. ஆனா செய்ற வேலை எல்லாம் மூன்றாம் தரமா மோசமா இருக்கு – பாகிஸ்தான் பசித் அலி விமர்சனம்

இந்தியா சில போட்டிகளில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தபோதும், அபிஷேக் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார்.இந்தியாவின் அடுத்த ஒருநாள் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடராகும். இது அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பெர்த், அடிலெய்டு மற்றும் சிட்னியில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அபிஷேக் தனது முதல் ஒருநாள் அழைப்பிற்கு வலுவான வாய்ப்பைப் பெறலாம்.

- Advertisement -