யாருக்கு இந்த மனசு வரும்.. சாய் சுதர்சனுக்காக கேஎல் ராகுல் செய்த செயல்.. நெகழ்ச்சியில் கிரிக்கெட் உலகம்

0
7263

இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு நாள் தொடரை வென்ற இரண்டாவது கேப்டன் என்ற பெருமையை கேல் ராகுல் பெற்றார்.

இதற்கு முன்பாக விராட் கோலி மட்டும் தான் இந்த சாதனையை படைத்திருந்தார். இந்தத் தொடரில் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி இரண்டு அரை சதம் அடித்த நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன், மூன்றாவது போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு சாய் சுதர்சன் பிடித்த காட்சி தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. சாய் சுதர்சன் அபாரமாக நின்று பாய்ந்து கிளாஸ்சனை ஆட்டம் இழக்க வைத்தார். இது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஒவ்வொரு போட்டியிலும் யார் சிறப்பாக பில்டிங் செய்கிறார்களோ, அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டு இந்திய பில்டிங் பயிற்சியாளர் அஜய் ரத்னா பாராட்டுகளை தெரிவிப்பார். இந்த பழக்கம் தற்போது தென்னாப்பிரிக்கா தொடரிலும் கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கே எல் ராகுல் நான்கு கேட்ச்களை பிடித்தார். இந்த தொடரில் மொத்தம் அவர் ஆறு கேட்ச்களை பிடித்திருக்கிறார். இதுகுறித்து வீரர்களும் பேசிய அஜய் ரத்ரா, இந்த தொடரில் பல முக்கியமான கேச்சுகளை வீரர்கள் பிடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

நாம் 12 கேட்ச்களை மொத்தம் இந்த தொடரில் பிடித்திருக்கிறோம். அதில் கே எல் ராகுல் 6 கேட்ச்களையும் சஞ்சு சாம்சன் இரண்டு கேட்ச்கள் பிடித்திருக்கிறார்கள். சாய் சுதர்சன் என்று ஒரு அற்புதமான கேட்சை பிடித்தார். இதனால் இன்று யாருக்கு இந்த பரிசை வழங்குவது என்ற குழப்பம் எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

சாய் சுதர்சனக்கா ராகுலுக்கா என்று குழம்பி இருக்கிறேன். எனினும் கே எல் ராகுல் இந்த விருதை இளம் வீரரான சாய் சுதர்சனுக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறினார். இதனால் நாங்கள் இந்த விருதை சாய் சுதர்சனுக்கு வழங்குகிறோம் என்று அஜய் ரத்னா தெரிவித்துள்ளார்.

கே எல் ராகுலின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இளைஞர்களை மதிக்க தொடங்கி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தென்னாப்பிரிக்க மண்ணில் கே எல் ராகுல் முதலில் கேப்டனாக மாறி அடி வாங்கினார் தற்போது அதே மண்ணில் தொடரை வென்று அசத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.