IND vs NED.. யாராலும் அசைக்க முடியாத ஏபி டிவில்லியர்ஸ் 8 வருட பிரம்மாண்ட சாதனை.. முறியடித்த ஹிட்மேன் ரோகித் சர்மா.!

0
5860

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையின் 45 வது போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கில் இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

வழக்கம்போல் அதிரடியாக துவங்கிய ரோஹித் இந்த உலகக் கோப்பை போட்டியிலும் தனது அரை சதத்தை பதிவு செய்தார். இன்றைய போட்டியில் அவர் அவர் 54 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் கில் 32 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

- Advertisement -

தற்போது விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். விராட் கோலி 46 ரன்கள் உடன் ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது வரை 179 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் இழந்திருக்கிறது. 25 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்தியா முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய ஸ்கோர் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தப் போட்டியின் துவக்கத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஒரு உலக சாதனை புரிந்தார். ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை புரிந்து இருக்கிறார் அவர். இன்றைய போட்டியின் ஏழாவது ஓவரை ஆக்கர் மேன் வீசியபோது அவரது பந்தில் சிக்சர் அடித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்திருக்கிறார் ரோஹித் சர்மா.

இதுவரை 59 சிக்ஸர்கள் இந்த வருடங்களில் அவர் அடித்திருக்கிறார். இதற்கு முன்பு தென்னாப்பிரிக்க அணியின் மிஸ்டர் 360 டிகிரி ஏபி டிவில்லியர்ஸ் அடித்த 58 சிக்ஸர்கள் சாதனையாக இருந்தது. டி வில்லியர்ஸ் இந்த சாதனையை 2015 ஆம் ஆண்டு படைத்திருந்தார். தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இது முறியடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த போட்டியில் இதை சமன் செய்த ரோகித் சர்மா இந்த போட்டியில் முறியடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த சாதனை பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக டிவில்லியர்ஸ் 58 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெயில் 56 சிக்ஸர்கள் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா இந்த போட்டியில் மற்றொரு சாதனையும் படைத்திருக்கிறார். ஒரு கேப்டனாக இருந்து ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார் அவர். இதற்கு முன்பு அந்த சாதனை இங்கிலாந்து கேப்டன் மோர்கன் வசம் இருந்தது. இன்றைய போட்டியில் அந்த சாதனையும் ரோஹித் சர்மாவால் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது இயான் மோர்கன் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை ரோஹித் சர்மா 2023 உலக கோப்பையில் முறியடித்து இருக்கிறார். ரோஹித் சர்மா இந்த உலகக் கோப்பையில் மட்டும் 23 சிக்சர்கள் எடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து இயான் மோர்கன் இரண்டாம் இடத்தில் 22 சிக்ஸர்களுடன் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் டிவில்லியர்ஸ் 21 சிக்ஸர்களுடன் உள்ளார்.