IND vs IRE.. 2வது டி20ல் இந்தியா வெற்றி.. பும்ரா கேப்டன்சி மூளையால் ஜெயித்தது எப்படி?.. சாதனையும் தக்கவைப்பு!

0
10514
Bumrah

இந்திய அணி தற்பொழுது அயர்லாந்து நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இன்று நடைபெற்ற தொடரின் இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் விளையாடிய வீரர்களைக் கொண்டு களம் இறங்கியது.

- Advertisement -

இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 18, திலக் வர்மா 1 ரன்னில் பவர் பிளே முடிவதற்குள் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ருத்ராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டார்கள். சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 40 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ருத்ராஜ் 43 பந்தில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 58 ரன்கள் குவித்தார்.

இதற்கு அடுத்து இறுதியில் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே அதிரடியாக விளையாடி கடைசி கட்டத்தில் 51 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ரிங்கு சிங் 21 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 38 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். சிவம் துபே இரண்டு சிக்ஸர்கள் உடன் 16 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் தரப்பில் மெக்கார்தி நான்கு ஓவர்களுக்கு 36 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டெர்லிங் 0, லார்கன் டக்கர் 0, ஹேரி டெக்டர் 7, கர்டீஸ் கேம்பர் 18, ஜார்ஜ் டக்ரல் 13, மார்க் அடைர் 23, மெக்கார்தி 2, கிரேஜ் எங் 1, ஜோஸ் லிட்டில் 0* ஆகியோர் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

- Advertisement -

ஆனால் துவக்க ஆட்டக்காரராகக் களம் வந்த முன்னாள் கேப்டன் ஆன்டி பால்பெர்னி அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அயர்லாந்து அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஸ்னோய் தலா இரண்டு விக்கெட்களும், அர்ஸ்தீப் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்திய அணி இதுவரை அயர்லாந்து அணி உடன் டி20 போட்டியில் தோற்றதில்லை என்கின்ற சாதனையோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று, தொடரை பும்ரா தலைமையில் கைப்பற்றி இருக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணி இரண்டாவது பந்து வீசிய காரணத்தால் பவர் பிளேவில் பும்ரா ஒரு ஓவர் மட்டும் பந்து வீசினார். மூன்று ஓவர்களை தக்க வைத்து, சிவம் துபே ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததும், இரண்டாவது ஓவரை வீசி மொமண்டத்தை கட்டுப்படுத்தினார்.

ஆடுகளம் மெதுவாக இருக்க இந்த முறை சிவம் துபேவுக்கு இரண்டு ஓவர்கள் தந்தார். வாஷிங்டன் சுந்தரை நிறுத்தி எடுத்து வந்து, காற்றுக்கு எதிர் திசையில் பந்து வீச வைத்தார். அர்ஸ்தீப் ரன்களுக்கு போகின்ற காரணத்தால், இந்த முறை இருபதாவது ஓவரை அவர் வைத்துக் கொண்டார். கேப்டனாக பும்ரா மிகத் துல்லியமாக இந்த போட்டியில் இருந்தார்!