அபிஷேக் ஷர்மா கிட்ட அந்த ஈகோவே இல்லை.. நேத்து அவர் செஞ்ச இந்த காரியம் அற்புதமானது – புஜாரா கருத்து

0
0

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 30 பந்துகளில் 69 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமான தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் அணுகுமுறையை முன்னாள் வீரர் செதேஷ்வர் புஜாரா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

​முந்தைய போட்டிகளில் ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்த அபிஷேக் சர்மா, இப்போட்டியில் தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டுத் தொடக்கத்தில் சற்றுப் பொறுமை காத்தார்.

- Advertisement -

இது குறித்து புஜாரா பேசும்போது “அவர் 5 முதல் 6 பந்துகளை எதிர்கொண்டார், இது அவரைப் பொறுத்தவரை மிகவும் அதிகமாகும். அவர் பொதுவாக எந்த பந்துவீச்சாளருக்கும் மரியாதை கொடுக்க விரும்பாத ஒரு எக்ஸ்புளோசிவ் பேட்டர்”
​
“ரோஸ்டன் சேஸ் தனக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி வருவதால், அவர் எவ்வாறு பந்துவீசுகிறார், பிட்ச் எப்படி ஒத்துழைக்கிறது என்பதைப் பார்க்க விரும்புவதாக பேட்டியில் அவரே கூறினார். அதன் பிறகுதான் அவர் ஷாட்களை ஆடத் தொடங்கினார்; சேஸ் எவ்வாறு பந்துவீசுகிறார் என்பதும், தனது ஸ்கோரிங் வாய்ப்புகள் எங்கு உள்ளன என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. அவரிடம் ஈகோவே இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -