வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு இருப்பது குறித்து அவரது சிறுவயது கோச் மணீஷ் ஓஜா இந்திய அணி நிர்வாகத்தின் மீது கடும் கோபத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மணீஷ் ஓஜா பேசும்போது “தற்போதைய இந்திய அணி நிர்வாகம், வீரர்களை பெஞ்சில் அமர வைப்பதன் மூலமே உருவாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே அவர்கள் அந்த வேலையைத்தான் செய்கிறார்கள். கிரிக்கெட்டின் பல லெஜெண்ட்களிடம் நீங்கள் பேசிப் பாருங்கள், அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க வேண்டும் என்றால் அவர்களை அந்த சூழலில் இறக்கி மேட்ச் ஆட வைக்க வேண்டும் என்றுதான் அனைவரும் சொல்வார்கள். பெஞ்சில் உட்கார வைத்து எந்த ஒரு வீரரும் உருவானதும் இல்லை, இனி உருவாகப் போவதும் இல்லை”
“ஒன்று அவர்கள் இந்த சிறுவனுக்கு வாய்ப்பே கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து, வெளியே உட்கார வைத்து அவனை விரக்தி அடையச் செய்கிறார்கள். இப்போது என்ன சொல்வது? வெளியே உட்காரும்போது, அணிக்கு நம்முடைய தேவை எதுவுமே இல்லை என்ற எண்ணம் வந்து அந்த சிறுவன் விரக்தியடைவான்.
“இந்த வயதில் இந்த சிறுவன் மேட்ச் பை மேட்ச் ஆடி முதிர்ச்சி பெற வேண்டும், அவனது ஆட்டத்தில் முன்னேற்றமும் மெருகேற்றமும் வர வேண்டும். ஆனால் அவன் வெளியே உட்கார்ந்து கொண்டு வாட்டர் சர்வ் செய்து கொண்டிருக்கிறான். இப்போது இருக்கும் அணி நிர்வாகம் ஒரு வகையான ‘டிக்டேட்டர்ஷிப்’ (சர்வாதிகாரம்) செய்கிறது, தங்கள் மனதிற்கு எது வருகிறதோ அதை செய்கிறார்கள்”
“என்னைப் பொறுத்தவரை வைபவ் ஒரு புயல் போன்றவன். அவனை யார் எதிர்க்க முயன்றாலும் இன்று இல்லாவிட்டாலும் நாளை உடைந்து போவார்கள். இந்த புயல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். நாங்கள் ஆறு மாதம், ஒரு வருடம் அல்லது ஒன்று இரண்டு ஐபிஎல் சீசன்களைப் பற்றி பேசவில்லை.
வரும் ஆண்டுகளில் அவரது பெர்ஃபார்மன்ஸ் ஒரு ஸ்டார் போல, சூரியனைப் போல பிரகாசிப்பதை நீங்கள் காண்பீர்கள். அனைவரும் தங்களுக்கு தேவையானதைச் செய்யட்டும்; அவன் எல்லா இடங்களிலும் ரன்கள் குவித்து தனது ஆதிக்கத்தைச் செலுத்துவான். அந்த இளம் சிறுவனிடம் அவ்வளவு திறமையும் பொட்டன்ஷியலும் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






