சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் சாண்டோ, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, தாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம் என்பதால் இதில் எந்த கவலையும் இல்லை என்று கூறி இருந்தார். இந்த சூழலில் இந்திய அணியில் பும்ரா இல்லாததால் நட்சத்திர வீரர் ஆர்ஸ்தீப் சிங்கை தான் சேர்க்க வேண்டும் என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், ஆர்ஸ்தீப் சிங் இடது கை வேகப்பந்துவீச்சாளராக இருப்பதால் அவரால் மிகப்பெரிய தாக்கத்தை வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஏற்படுத்த முடியும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்திய அணியின் ஆர்ஸ்தீப் சிங் பதிலாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டிருக்கிறார். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என தற்போது பார்க்கலாம். ஆர்ஸ்தீப் சிங்கை விட ஹர்சித் ரானா நல்ல வேகத்தில் பந்து வீசுவார். துபாய் ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் கூட ஸ்விங் ஆகாது. இதனால் வேகம் என்பது மிகவும் முக்கியம் என்பதால் தான் ரோகித் சர்மா அவருக்கு வாய்ப்பு தந்தி இருக்கலாம் என தெரிகிறது.
இதேபோன்று இந்திய அணியில் சமீப காலமாக விக்கெட் வேட்டை நடத்தி வந்த வருண் சக்கரவர்த்தி பிளேயின் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருண் சக்கரவர்த்தி பதிலாக குல்தீப் யாதவுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவும் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்திருக்கிறது.
வருண் சக்கரவர்த்தி டி20 கிரிக்கெட் சிறப்பாக செயல்பட்டாலும், ஐசிசி தொடரில் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை. அதுவும் இல்லாமல் துபாயில் அவர் டி20 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார்.
இதையும் படிங்க- IML டி20 2025: சச்சின் தலைமையில் ஆடும் இந்தியா.. எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்.?. தொடங்கும் நாள் மற்றும் நேர விபரங்கள்
ஆனால் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் குல்தீப் யாதவ் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.குல்தீப் யாதவ் இதுவரை துபாய் கிரிக்கெட் மைதானத்தில் 10 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தி இருக்கிறார். இதன் காரணமாகத்தான் வருண் சக்கரவர்த்தியை விட குல்தீப் யாதவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.