ரோகித் சர்மாவை அணியை விட்டு நீக்க வேண்டாம்.. கொஞ்சம் நேரம் கொடுங்க.. முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே

0
22

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுக்கு வீரராக  தன்னை நிலைநிறுத்துவதற்கு நேரம்  வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான பிரவீன் ஆம்ரே,
தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி, 2025 சாம்பியன்ஸ் டிராபியின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது. ரோஹித் சர்மா, தொடக்கத்தில் தனது அணுகுமுறையை மாற்றியமைத்து ஒரு கேப்டனாக அணியை வழி நடத்தினார்.

- Advertisement -

ரோஹித் ஷர்மா, மும்பை இந்தியன்ஸ்  இருந்த போது, அவருடைய  கேப்டன் பதவி முடிவுக்கு வந்தது. அப்போதும் இதே ஒரு மாற்றத்தை எதிர்கொண்டார். ரோஹித் சர்மாவை புதிய தலைமையின் கீழ் ஒருநாள் அணிக்கு திரும்பும்போது, அவருக்கு பொறுமையாக இருக்குமாறு அணி நிர்வாகத்தை பிரவீன் ஆம்ரே வலியுறுத்தினார்.

நேரம் கொடுங்க:

இது குறித்து பேசிய அவர், “அவர் இந்த அணியில் மிகவும் மூத்த வீரர், அவர் அப்படியே விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அணி நிர்வாகமும் அவருக்கு வளர்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டும். இப்போது நேரம் கொடுக்க வேண்டும். மற்றும் அவரது பேட்டிங்கை அனுபவிக்க விட வேண்டும்.”

- Advertisement -

“அவர் தனது பேட்டிங்கை எவ்வளவு அனுபவிக்கிறாரோ, அவ்வளவு ஆட்டத்தை வெல்லக்கூடியவராக மாற முடியும். மேலும், கேப்டன்சியின் சுமை இல்லாததால், ஆட்டத்தை வெல்லக்கூடிய ரோஹித் இப்போது நாம் விரும்புவது. அவர் இன்னும் அதற்கு தகுதியானவர் என்று நினைக்கிறேன்.”

10 கிலோ எடை குறைப்பு:

“நான் BKC-யில் அவர் பயிற்சி செய்யும்போது இருந்தேன். அவரைப் பார்த்தபோது, ஒரு உறுதியான உடல் ஒரு உறுதியான மனதை உருவாக்கும் என்று அவரிடம் கூறினேன்.ஏனெனில் அவர் கடந்த ஆறு மாதங்களாக கடுமையாக உழைத்து 10 கிலோ எடையை குறைத்துள்ளார்”

“ஒரு தொடரை ஒரு முறை எடுத்துக்கொள்வோம். அதில் கவனம் செலுத்துவோம். அவரை தனது கிரிக்கெட்டை அனுபவிக்க விடுவோம், ஏனெனில் அவருக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் அவருக்கு அனுமதிக்க வேண்டியது, அவரை தனது கிரிக்கெட்டை அனுபவிக்க விடுவது.”

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் தான் அடுத்த கிங்.. நான் செலக்டரா இருந்தா நடக்கிறதே வேற – மதன்லால் விமர்சனம்

“கடந்த 10 ஆண்டுகளில் அவர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டார். எனவே அவர் இதைப் பற்றி கவலைப்படுவதாக நான் நினைக்கவில்லை” என்று பிரவீன் ஆம்ரே தெரிவித்தார். இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், அக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை பெர்த்தில்  விளையாட உள்ளது.

- Advertisement -