ஜெய்ஸ்வால் தான் அடுத்த கிங்.. நான் செலக்டரா இருந்தா நடக்கிறதே வேற – மதன்லால் விமர்சனம்

0
53
Jaiswal

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் ஜெய்ஸ்வாலை தான் செலெக்டராக இருந்திருந்தால் மூன்று வடிவத்திலும் கட்டாயம் விளையாட வைத்திருப்பேன் என இந்திய முன்னாள் வீரர் மதன் லால் கூறியிருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம் பெற்று இருக்கிறார். ஆனால் அவருக்கு ஒருநாள் இந்திய அணியில் மட்டுமே இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் விளையாட வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக இருக்கிறது. இந்திய டி20 அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இந்தியாவின் அடுத்த கிங்

இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பிறகு அவரது இடத்தை நிரப்பக்கூடியவராக மூன்று வடிவத்திலும் சிறப்பாக விளையாடக்கூடியவராக ஜெய்ஸ்வால் இருப்பார் என பல முன்னாள் வீரர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்ற வகையில் டெஸ்ட் மற்றும் டி20 வடிவத்தில் ஜெய்ஸ்வால் தன்னை நிரூபித்து இருந்தார்.

இந்த நிலையில் கில்லை மூன்று வடிவ இந்திய அணிக்கும் கொண்டு வருகின்ற முயற்சியால் ஜெய்ஸ்வாலுக்கு இந்திய வெள்ளை பந்து அணிகளில் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பல முன்னாள் வீரர்கள் கடுமையான முறையில் விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நான் செலெக்டராக இருந்திருந்தால்

இதுகுறித்து மதன்லால் பேசும் பொழுது “நான் தேர்வாளராக இருந்திருந்தால் ஒருபோதும் ஜெய்ஸ்வாலை எந்த வடிவத்திலும் நீக்கி இருக்க மாட்டேன். அவர் ஒரு உண்மையான மேட்ச் வின்னர். அவர் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே தன்னை நிரூபித்திருக்கிறார். ஆசிய கோப்பை அல்லது வேறு எந்த தொடர் மற்றும் வடிவமாக இருந்திருந்தாலும், அவரைப் போன்ற ஒரு வீரர் அணியில் இடம் பெற்று விளையாட வேண்டும்”

இதையும் படிங்க : ரோகித் எடையை குறைக்க காரணம்.. விமான நிலையத்தில் நடந்த அந்த ஒரு சம்பவம் தான் – அபிஷேக் நாயர் வெளியிட்ட தகவல்

“ஒருவர் தனியாக போட்டியை வெல்ல முடியும் என்றால் நீங்கள் அவரை ஆதரிக்க வேண்டும். ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம். முடிவெடுக்கும் அதிகாரம் என் கையில் இருந்திருந்தால் அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -