இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது. இந்தூர் ஆடுகளத்திற்கு ஐசிசி மோசம் என்று தரச் சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து அனைவரின் கண்களும் அகமதாபாத் ஆடுகளும் எப்படி செயல்படும் என்பதை எதிர்நோக்கி தான் உள்ளது.
இந்த போட்டிக்கு முன்பு ஏற்கனவே பேசிய கேப்டன் ரோஹித் சர்மா இந்தூர் டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றால் அஹமதாபாத் ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து நான்காவது டெஸ்ட் வென்றால் மட்டுமே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற முடியும்.
இல்லை எனில் நியூசிலாந்து இலங்கை அணிகள் மோதும் ஆட்டத்தில் இலங்கை அணி ஒரு டெஸ்டிலாவது டிரா செய்ய வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் இந்திய அணி வீரர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறி வருகிறார்கள்.
இதனால் ஆடுகளம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள அகமதாபாத் ஆடுகளம் பராமரிப்பார்கள் இதுவரை அணியிடமிருந்து எந்த அறிவுரைகளும் வரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதகமாக செயல்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சித் போட்டிகளில் 500 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்சில் அடிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் இந்தியா ஆஸ்திரேலியா போட்டிகளுக்கான ஆடுகளம் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனினும் அது எப்படி செயல்படும் என்று போட்டி நடைபெறும் போது தான் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் இங்கு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் பேட்டிற்கும்,பந்திற்கும் சரிசமமான முறையில் இருக்கும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே அகமதாபாத் ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது சமி கடைசி டெஸ்டில் விளையாடுகிறார். அவருக்கு முகமது சிராஜ் இடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.