அக். 31ஆம் தேதி சம்பவம் இருக்கு.. இந்த 3 இந்திய வீரர்களை கவனீங்க.. வாய்ப்பு கொடுப்பாரா அகர்கர்

0
42

இந்தியா ‘ஏ’ அணி, தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு இடையிலான 2 நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டி பெங்களூருவில்  நடைபெறுகிறது. பிசிசிஐ இரண்டு போட்டிகளுக்கும் வலுவான அணியை அறிவித்துள்ளது. டெஸ்ட் அணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளனர்.

முதல் டெஸ்டில், இந்தியா ‘ஏ’ டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தனுஷ் கோட்டியான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், நாளை இந்தியா ஏ அணி பேட்டிங் செய்ய உள்ளது. இதில், கவனிக்க வேண்டிய மூன்று வீரர்களைப் பார்ப்போம்.

- Advertisement -

ரிஷப் பண்ட் நட்சத்திர விக்கெட் கீப்பரான இவர், 2025 ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் போது இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் ஏற்பட்ட கால் எலும்பு முறிவால் ஓய்வில் இருந்தார்.
தற்போது தான் அணிக்கு அவர் திரும்புகிறார். பண்ட் திரும்புவது மட்டுமல்லாமல், வரவிருக்கும் தென்னாப்பிரிக்கா தொடருக்காக இந்தியா ‘ஏ’ அணியை வழிநடத்துகிறார். 

ரிஷப் பண்ட் கம்பேக்:

ரிஷப் பண்ட் மூன்று மாத ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்புவதால் அவர் எப்படி விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதில்  பண்ட் குறைந்தபட்சம் ஒரு அரை சதமாவது கடக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்  பண்ட் இடம் பெறுவார்.

- Advertisement -

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ரஜத் பட்டிதார்.  மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தனது சமீபத்திய செயல்திறன்களால் படிப்படியாக உயர்ந்து வருகிறார். இதனால் இந்திய மிடில் ஆர்டரிலும் இடம் பிடிக்கலாம். 2025 துலீப் டிராபியில் சென்ட்ரல் ஜோனை சாம்பியனாக்கி இரண்டு சதங்களை அடித்தார்.

நடுவரிசையில் இடம்:

இரானி டிராபியின் முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக அரைசதம் அடித்தார்.  ரஞ்சி டிராபி சீசனை ஆரம்பிக்க அடுத்தடுத்த சதத்தை விளாசினார். ரெட்-பால் ஃபார்மில் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளதால், தென்னாப்பிரிக்கா ‘ஏ’க்கு எதிராக கவனிக்க வேண்டிய வீரர்களில் ஒருவர்.

இந்தியா இன்னும் மிடில் ஆர்டர் இடத்திற்கு தீர்மானிக்கவில்லை. துருவ் ஜூரல் மற்றும் தேவ்தத் படிக்கல் போன்றோர் போட்டியிடும் நிலையில், படிதார் மற்றொரு சிறப்பான ஆட்டத்துடன் அணி தேர்வுக்கு முன்  நுழையலாம்.

இதையும் படிங்க: ஹாங்காங் சிக்சஸ் 2025.. எந்த சேனல், நேரம், ஒடிடியில் பார்ப்பது.. இந்தியா, பாக் போட்டி எப்போது

இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பவர் ஆயுஷ் மஹத்ரே. மும்பை இளம் வீரர், 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியதால்  இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்தியா யு-19 அணியை வழிநடத்தினார்.  கடைசி 10 ஆட்டங்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உள்ளது. மஹத்ரே சமீபத்தில் 2025-26 ரஞ்சி டிராபி தொடக்க ஆட்டத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு எதிராக மும்பைக்காக விளையாடி இரண்டு அசத்தலான ஆட்டத்தை பதிவு செய்தார். ஆனால் அதை  பெரிய ஸ்கோராக மாற்றவில்லை. இதைத் தவிர சாய்சுதர்சன் ஆயுஸ் பதோனி ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -