ஹாங்காங் சிக்ஸ் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஸ்டூவர்ட் பின்னி, பாரத் சிப்ளி ஆகியோர் இந்தியா சார்பாக விளையாட உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய அணிகளுடன் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நவம்பர் 7-ஆம் தேதி மோதவுள்ளன.
தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நேபாளம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஹாங்காங் ஆகியவை போட்டியிடும். ஒவ்வொரு அணிக்கும் ஆறு ஓவர்கள், ஆறு வீரர்கள் கொண்ட அணி, அதிரடி நிறைந்த வேகமான கிரிக்கெட் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
12 அணிகள், 4 பிரிவு:
இந்நிகழ்ச்சி குரூப் பிரிவில் தொடங்கும். 12 அணிகளை நான்கு பிரிவுகளாக, மூன்று அணிகள் வீதம் பிரிக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிட அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடர் குறித்து பேசிய பேன்கோட் இணை நிறுவனர் பிரசன்னா கிருஷ்ணன், “ஹாங்காங் சிக்ஸஸ் என்ற ஐக்கானிக் போட்டியை இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
“இப்போட்டிக்கு வளமான பாரம்பரியம் உள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற மார்க்கீ வீரர்கள் பங்கேற்கும் நிலையில், ரசிகர்கள் மிகச்சிறந்த கிரிக்கெட்டை எதிர்நோக்கலாம். இந்த நிகழ்விற்கு சிறந்த கவரேஜ் மற்றும் பார்வை அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என்றார்.
ஹாங்காங் சிக்ஸஸ் 2025-ஐ எங்கு பார்ப்பது?
ரசிகர்கள் ஃபேன்கோடின் மொபைல் ஆப் ,அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக், ஜியோ எஸ்டிபி, சாம்சங் டிவி, ஜியோ டிவி, ஜியோ டிவி, ஓடிடி ப்ளே, அமேசான் பிரைம் வீடியோ சேனல்கள், வாட்ச்ஓ மற்றும் வெப்சைட்டில் fancode.com-ல் காணலாம். நவம்பர் 7ஆம் தேதி
இந்தியா vs பாகிஸ்தான் — சி பிரிவில் மோதும். இந்தப் போட்டி மதியம் 2 மணிக்கு நடைபெறும்.
இதையும் படிங்க: ரோகித் சர்மா பற்றி அந்த விஷயத்தை நம்பவே முடியல.. 3 இரட்டை சதம் இருந்துமா அப்படி – நாசர் ஹுசைன் வியப்பு
இந்த தொடரில் பாகிஸ்தான் இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா ஐந்து முறை வென்றிருக்கிறது. இலங்கை அணி இரண்டு முறையும், ஆஸ்திரேலியா இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் வென்றுள்ளது. இந்த தொடரில் விக்கைக்கு பெரிய தவிர அருகில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தலா ஒரு ஒவ்வொரு வீச வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.






