உகோ-ல் கண்டிப்பா இந்த 4 டீம்தான் அரையிறுதிக்கு வரும்.. வன்மத்தை காட்டிய வாகன்?!

0
885
Vaughan

எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் துவங்க இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது!

நடைபெற இருக்கும் உலகக் கோப்பையை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் போட்டியை நடத்தும் இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அதிக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா என இந்த மூன்று அணிகளும் பலமிக்க அணிகளாக கணிக்கப்பட்டு இருக்கின்றன.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆசிய கண்டத்தில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால் பாகிஸ்தான், உலகக் கோப்பை தொடரில் எப்பொழுதும் சிறப்பாக செயல்படும் நியூசிலாந்து, உலகக்கோப்பை தொடரில் சரிவர செயல்படாமல் போயிருந்தாலும், இந்த முறை கொஞ்சம் பலமாக தெரியும் தென்னாப்பிரிக்க ஆகிய அணிகள் இருக்கின்றன.

இந்த மூன்று அணிகளுமே நான்காவது இடத்திற்கு போட்டியிடும் அணிகளாக மட்டுமே இல்லை. இவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிர்ப்பாராத அதிர்ச்சியையும் தர முடியும். இவர்களுக்கான தொடராக அமைந்தால் இவர்கள் யாரையாவது வெளியேற்ற கூட முடியும்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்காக ஆசஸ் கிரிக்கெட் தொடரை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு, தன்னுடைய நான்கு அரைஇறுதி அணிகளை தேர்வு செய்திருக்கிறார். அதில் அவர் ஒரு ஆச்சரியமான கணிப்பைக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“இந்த வாரத்தில் துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை காத்திருக்க முடியவில்லை. இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு வரும் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்!

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தற்போது பல வீரர்களாலும், கிரிக்கெட் ரசிகர்களாலும் பலமிக்க அணியாக கருதப்படுகிற ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு வராது என்று கூறியிருக்கிறார். வழக்கமாக கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆகாது. அதனுடைய பிரதிபலிப்புதான் இங்கிலாந்து மைக்கேல் வாகனின் கருத்து என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்!