“உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் குவாலிட்டி ஆனது கிடையாது. காரணம் இதுதான்” – கங்குலி பரபரப்பான விளக்கம்!

0
347
Ganguly

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துவங்குகிறது. இறுதியாக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி முடிவடைகிறது!

இதற்கான போட்டி அட்டவணைகள் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இதற்கு அடுத்து டெல்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இரண்டாவது ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இங்கு ரசிகர்கள் இந்த முறை நிரப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாகவே இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் சாதாரண போட்டிகள் கூட உலகின் எந்த நாட்டு அணியும் மோதிக் கொள்ளும் போட்டியை விட மிகுந்த பரபரப்போடும் எதிர்பார்ப்போடும் அமைந்திருக்கும்.

இந்த முறை இந்தியாவில் வைத்து பாகிஸ்தான் அணி இந்தியாவை சந்திக்கிறது என்பது இருநாட்டு ரசிகர்கள் தாண்டி மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி பரபரப்பாக காத்திருக்க வைத்திருக்கிறது. 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடந்த பொழுது வந்த பாகிஸ்தான் அணி மீண்டும் இப்பொழுதுதான் வருகிறது.

- Advertisement -

இந்தப் போட்டி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறும் பொழுது ” இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு மிகுந்த பரபரப்பு இருக்கிறது. ஆனால் நீண்ட காலமாக போட்டி தரமாக அமைந்தது இல்லை. ஏனெனில் இந்தியா ஒரு தலைப்பட்சமாகத்தான் பாகிஸ்தான் அணியை வென்று வந்திருக்கிறது. துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் மட்டுமே பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்திருக்கலாம்.

ஆனால் அந்த போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை. என்னைப் பொருத்தவரை இந்த உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதிக் கொள்ளும் போட்டிதான் மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் அந்தப் போட்டி மிகுந்த தரத்தோடு இருக்கும்.

இந்த பாகிஸ்தான் அணியும் நன்றாக இருக்கிறது. இவர்கள் பிளாட் விக்கெட்டில் நன்றாக விளையாடுகிறார்கள். அப்படியான நிலைமைகளில் பந்து வீசவும் நல்ல பந்துவீச்சாளர்கள் வைத்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இந்திய அணி நல்ல வேகம் மற்றும் ஸ்விங் இருக்கும் ஆடுகளங்களிலும் சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்திய அணியின் பேட்டிங் தரம் மிக நன்றாக இருக்கிறது. இதில் என்ன நடக்கும் என்று என்னால் முன்னோக்கி சொல்ல முடியாது. இந்தியா இதில் எப்போது வேண்டுமானாலும் முன்னேறும்!” என்று கூறி இருக்கிறார்!