இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த வீரருக்கு அதிக எதிர்பார்க்காத தொகை கிடைக்கும் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விடுகதையை வைத்திருக்கிறார்.
தற்போது பத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து கழட்டி விடப்படும் வீரர்களின் விவரத்தை சில வாரங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து இந்த மாதம் டிசம்பர் மத்தியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின் கொடுத்த துப்பு
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் அகிப் ஜாவேத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி இருவரது புகைப்படங்களையும் சேர்த்து வெளியிட்டு, இந்த உள்நாட்டு இந்திய வீரருக்கு ஏலத்தில் அதிக அணிகள் விருப்பம் காட்டும் நிறைய தொகைக்கு செல்வார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் பலரும் அஸ்வின் புதிராகத் தெரிவித்திருக்கும் இந்தத் தகவலுக்கு பின்னால் இருக்கும் வீரர் யார் என்பது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த வீரர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
யார் அந்த வீரர்?
தற்போது காஷ்மீர் அணிக்காக விளையாடி வரும் 29 வயதான வலதுகை வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபிதான் ரவிச்சந்திரன் அஸ்வின் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கும் வீரர் என்று தெரிந்திருக்கிறது. அவர் கடந்த ரஞ்சி சீசனில் மொத்தம் 44 விக்கெட் கைப்பற்றி இருந்தார். தற்போதைய ரஞ்சி சீசனில் இதுவரையில் 29 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க : எங்க ஆளுங்க பெரிய நாடுகளுக்கு எதிரா ஆட அழுதுகிட்டு இருக்காங்க.. ஆனா அது என் கையில இல்ல – டெம்பா பவுமா பேச்சு
மேலும் தற்போது நடைபெற்று வரும் சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் பிஹார் அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி காஷ்மீர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். பந்தை சரியான லைன் அண்ட் லென்த்தில் நகர்த்த முடிந்த திறமை கொண்ட இவருக்கு, அடுத்த நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அணிகள் போட்டி போடும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கருதுகிறார். குறிப்பாக சிஎஸ்கே அணி இவருக்காக மோதும் என்று தெரிகிறது.






