எங்க ஆளுங்க பெரிய நாடுகளுக்கு எதிரா ஆட அழுதுகிட்டு இருக்காங்க.. ஆனா அது என் கையில இல்ல – டெம்பா பவுமா பேச்சு

0
13
Bavuma

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி முன்னணி கிரிக்கெட் நாடுகளுக்கு எதிராக அதிக கிரிக்கெட் விளையாட கோரிக்கை வைத்துக் கொண்டிருப்பது குறித்து அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டி அளித்திருக்கிறார்.

இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் டெம்பா பவுமா விளையாடவில்லை. இன்று இரண்டாவது போட்டியில் அவர் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவின் நிலை

தென் ஆப்பிரிக்க அணி முன்னணி கிரிக்கெட் நாடுகளுக்கு எதிராக மிகவும் குறைந்த கிரிக்கெட் விளையாடுகிறது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இப்படி நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிராக குறைந்த போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீழ்ச்சி அடைந்தது. பிறகு சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் நடத்தப்பட்டு, அதிலிருந்து இளம் வீரர்கள் கொண்டுவரப்பட்டு, தற்போது தென் ஆப்பிரிக்க அணி மீண்டு வந்திருக்கிறது. எனவே அந்த அணி நிறைய போட்டிகளில் மீண்டும் பெரிய நாடுகளுக்கு எதிராக விளையாட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.

- Advertisement -

டெம்பா பவுமா பதில்

இதுகுறித்து டெம்பா பவுமா பேசும் பொழுது ” நாம் இன்னும் அதிக கிரிக்கெட் விளையாட வேண்டும் குறிப்பாக வளர்ந்த பெரிய கிரிக்கெட் நாடுகளுக்கு எதிராக விளையாட வேண்டும் என்று தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறோம். ஆனால் இதைச் செய்ய வேண்டியது கோட் சூட் போட்டுக் கொண்டிருக்கும் அந்த அதிகாரிகள்தான். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்தவர்கள் தான் செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: கம்பீர் எனக்கு நிறைய அழுத்தத்தை தருகிறார்.. விராட் பாய் கிட்ட இந்த ஒரு விஷயத்தை அதிகம் பேசறேன் – திலக் வர்மா பேட்டி

“எங்களில் சிலருக்கு கொஞ்சம் வயதாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் விளையாட முடியும் என்று தெரியாது. அதனால் இந்திய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நாங்கள் நீண்ட காலம் காத்துக் கொண்டிருக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -